Tuesday, February 23, 2016

புறநானூறு - 30. எங்ஙனம் பாடுவர்?

புறநானூறு - 30. எங்ஙனம் பாடுவர்?

பாடியவர்: உறையூர் முதுகண்ணன் சாத்தனார்.
பாடப்பட்டோன் : சோழன் நலங்கிள்ளி.
திணை :பாடாண். 
துறை : இயன்மொழி.
சிறப்பு : தலைவனின் இயல்பு கூறுதல். 


செஞ்ஞா யிற்றுச் செலவுமஞ் ஞாயிற்றுப் 
பரிப்பும் பரிப்புச் சூழ்ந்தமண் டிலமும் 
வளிதிரிதரு திசையும் 
வறிது நிலைஇய காயமு மென்றிவை 
சென்றளந் தறிந்தார் போல வென்றும்  

இனைத்தென் போரு முளரே யனைத்தும் 
அறிவறி வாகாச் செறிவினை யாகிக் 
களிறுகவு ளடுத்த வெறிகற் போல 
ஒளித்த துப்பினை யாதலின் வெளிப்பட 
யாங்ஙனம் பாடுவர் புலவர் கூம்பொடு 

மீப்பாய் களையாது மிசைப்பரந் தோண்டாது 
புகாஅர்ப் புகுந்த பெருங்கலந் தகாஅர் 
இடைப்புலப் பெருவழிச் சொரியும் 
கடற்பஃ றாரத்த நாடுகிழ வோயே. 


பொருளுரை: 

செங்கதிரவன் செல்லும் வழியும் அக்கதிரவனின் இயக்கமும் அந்த இயக்கத்தால் சூழப்பட்ட வட்டமான நிலப்பரப்பும் 
காற்று இயங்கும் திசையும் ஆதாரம் ஏதுமின்றி தானே நிற்கின்ற ஆகாயமும் என்று சொல்லப்பட்ட இவற்றை 
அங்கங்கே சென்று அளந்து பார்த்து அறிந்தவர்களைப் போல எல்லாம் இத்தனை அளவு என்று சொல்லும் கல்வி கற்றோரும் உள்ளனர். 

அத்தகைய கற்றறிந்த அறிவுடையோர்களாலும் அறிய முடியாத அளவில் அடக்கத்தை உடையவனாக, 
யானை தன் வாயினுள் அடக்கிய எறிகல் போல மறைத்த வலிமை உடையவனா தலால் உன்னைப்பற்றி முழுவதும் விளங்கும்படி புலவர்கள் எப்படிப் பாட முடியும்? 

பாய்மரத்தையும், மேலே விரித்துக் கட்டப்பட்ட பாயையும் எடுத்துச் சுருட்டாது, மரக்கலத்தில் உள்ள அதிகப்படியான பாரத்தையும் குறைக்காமல் 
ஆற்று முகத்துப் புகுந்த பெரிய மரக்கலத்தை பரதவர்களும், மரக்கலங்களைச் செலுத்த அறியாத உப்பு விளைப்போரும், 
மரக்கலத்திலுள்ள பொருட்களுக்குச் சம்பந்தம் இல்லாதவர்களும் பொருட்களை மரக்கலத்திலிருந்து எடுத்துச் செல்லும் போது இடைப்பட்ட வழியெங்கும் பொருட்கள் சிதறிக் கிடக்கும் கடல் வழியாகக் கொண்டு வரப்படும் 
பல வகையான பண்டங்களை உடைய நாட்டை உடையவனே! 


Decription: (A Song About Sozhan Nalangkilli)

There are many who have scientific knowledge . 
They know the path of the sun, the movement of the sun, the earth that is surrounded by the movement of the sun, the direction through which the wind blows, 
the sky which is above without any hold. 
They know the nature of the sun,earth, wind and sky and describe about them. 
But you are with so much of knowledge and self control so that even the people with wisdom cannot know you. 

You have a hidden strength like the stone which is kept in the cheek of the elephant which is to be spitted. 

The senseless Paradhavaas let the vessels from the sea to the river without lowering the sail and unloading some goods. 

As they do so, the things brought by them are scattered throughout the way. 
You are the lord of the fertile land which has such a sea income. 
-Mudhukannan Saaththanaar


முலம்:



http://thamizhanna.blogspot.ie/2010/07/purananooru-26-to-35-english.html

No comments: