Friday, February 19, 2016

புறநானூறு - 26. நோற்றார் நின் பகைவர்!

புறநானூறு - 26. நோற்றார் நின் பகைவர்!

பாடியவர்: மாங்குடி கிழவர்; மாங்குடி மருதனார் எனவும் பாடம்.
பாடப்பட்டோன்: பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்.
திணை: வாகை. 
துறை: அரச வாகை


நளிகட லிருங்குட்டத்து 
வளிபுடைத்த கலம்போலக் 
களிறுசென்று களனகற்றவும் 
களனகற்றிய வியலாங்கண் 
ஒளிறிலைய வெஃகேந்தி 

அரைசுபட வமருழக்கி 
உரைசெல முரசுவௌவி 
முடித்தலை யடுப்பாகப் 
புனற்குருதி யுலைக்கொளீஇத் 
தொடித்தோட் டுடுப்பிற் றுழந்த வல்சியின் 

அடுகளம் வேட்ட வடுபோர்ச் செழிய 
ஆன்ற கேள்வி யடங்கிய கொள்கை 
நான்மறை முதல்வர் சுற்ற மாக 
மன்ன ரேவல் செய்ய மன்னிய 
வேள்வி முற்றிய வாய்வாள் வேந்தே 

நோற்றோர் மன்றநின் பகைவர் நின்னொடு 
மாற்றா ரென்னும் பெயர்பெற் 
றாற்றா ராயினு மாண்டுவாழ் வோரே. 


பொருளுரை: 

மிக ஆழமான பெருங்கடலில் காற்றால் உந்தப்பட்டு நீரைக் கிழித்து ஓடும் மரக்கலம் போல, 
யானைகள் சென்று போர்க்களத்தில் வீரர்களை விலக்கி இடம் அகலச் செய்ய அவ்வாறு களம் அகலச்செய்த பரந்த இடத்தில் 
ஒளிர்கின்ற இலையையுடைய வேலை ஏந்தி, உன்னை எதிர்த்த அரசர்களை அழித்து போர்க்களத்தைக் கலக்கி 
புகழ் பரவ பகையரசரின் முரசுகளைக் கைப்பற்றினாய். 

கிரீடம் அணிந்த அவர்களின் தலைகளை அடுப்பாகக் கொண்டு 
புனலாகப் பெருகும் குருதியை அடுப்பை எரிக்கும் உலையில் பெய்து 
வீரவளை அணிந்த அவர்களின் தோள்களைத் துடுப்பாக ஆக்கித் துழாவி சமைக்கப்பட்ட உணவால் 
போர்க்களத்தில் களவேள்வி செய்த கொல்லும் போர் புரியும் செழிய! 

தகுந்த கல்வி கற்று ஐம்புலன்களை அடக்கிய மனவலிமையோடு, 
நான்கு வேதங்களையும் கற்ற அந்தணர்கள் உன்னைச் சூழ்ந்திருக்க, பிற மன்னர்கள் உன் சொற்படி கேட்டு பணிவிடை செய்ய, 
நிலையான பெயர் தரக்கூடிய வேள்வியைச் செய்து முடித்த பெருமை வாய்ந்த வாளினை யுடைய வேந்தே! 

உன்னோடு வேறுபட்டவர் என்னும் பெயரைப் பெற்று உன்னை எதிர்த்த உன் பகைவர்களும் யாவரும் அறியும்படித் தவம் செய்தவர்களாகவே கருதப்படுவர். 
அவர்கள் உன்னோடு போர் செய்தற்கு மாட்டாராயினும், அவர்களும் சொர்க்கத்தில் வாழ்பவர்கள் ஆவார்கள். Description:( A Song About Paandiyan Nedunjcezhiyan)

In the broad, deep sea the ship which was blown by the wind, runs piercing the water. 
Like that the elephants ran through the army and made way. 

You went through that way with your shining vel, fought with them so that they lost their strength and captured their murasus. 

Due to this you got victorious fame. 
You arranged the heads of your enemies as oven, poured their blood as cooking water and put the flesh and brain in it.

You used the shoulders of the dead warriors who had worn brave bracelets as ladles and cooked the food. 

With that food you had done so many battle velvies. 

Oh Sezhiyaa The nobles who have reasonable listening knowledge , strong mind which controls the five senses and learned vedaas have relationship with you. 

The petty kings are serving you . You have done several righteous velvies. 

Oh king having victorious vel! Your enemies are also good in one aspect. 
Though they died in the war with you, they had gone to the heaven. 
-Maangudi Marudhan

முலம்:

http://eluthu.com/kavithai/130370.html

http://thamizhanna.blogspot.ie/2010/07/purananooru-26-to-35-english.html

No comments: