Friday, February 19, 2016

புறநானூறு - 25. கூந்தலும் வேலும்!

 
புறநானூறு - 25. கூந்தலும் வேலும்!

பாடியவர்: கல்லாடனார்.
பாடப்பட்டோன்: தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்.
திணை: வாகை.
துறை: அரசவாகை

மீன்றிகழ் விசும்பிற் பாயிரு ளகல
ஈண்டுசெலன் மரபிற் றன்னியல் வழாஅ
துரவுச்சினந் திருகிய வுருகெழு ஞாயிறு
நிலவுத்திகழ் மதியமொடு நிலஞ்சேர்ந் தாஅங்
குடலருந் துப்பி னொன்றுமொழி வேந்தரை 5

அணங்கரும் பறந்தலை யுணங்கப் பண்ணி
பிணியுறு முரசங் கொண்ட காலை
நிலைதிரி பெறியத் திண்மடை கலங்கிச்
சிதைதலுய்ந் தன்றோ நின்வேல் செழிய
முலைபொலி யாக முருப்ப நூறி 10

மெய்ம்மறந்து பட்ட வரையாப் பூசல்
ஒண்ணுதன் மகளிர் கைம்மை கூர
அவிரறல் கடுக்கு மம்மென்
குவையிருங் கூந்தல் கொய்தல் கண்டே.

பொருளுரை:

விண்மீன்கள் விளங்கும் வானத்தின் பரந்த இருள் நீங்க விரைந்து செல்லும் வழக்க
முடைய தனது இயல்பில் தவறாது மிகுந்த வெப்பமுடன் உருவாகி உதிக்கின்ற கதிரவன் பளிச்சென்ற
ஒளியுடன் திகளும் சந்திரனோடு வந்து நிலத்தில் சேர்ந்தாற்போல அங்கே விளங்கி,
பொருதுதற்கு அரிய வலிமையுடைய இரு வேந்தர் வஞ்சினம் கூறினர்.

வருத்துதற்கரிய போர்க்களத்தில் அவர்களைத் தோல்வியுறச் செய்து உடலாலும் மனதாலும் வாடச் செய்தாய்!
வாரால் பிணிக்கப் பட்ட அவருடைய முரசத்தை எடுத்துக் கொண்ட பொழுது, நின்ற நிலையில் நின்று உன்னைச் சூழ்ந்து கொண்ட பகை வீரர்களைப் போர் புரிந்து வென்றாய்!

பொலிவான முலைகளையுடைய மார்பு வெப்பமுற அறைந்து கொண்டு அறிவு மயங்கி உற்ற அளவற்ற
அழுகை ஆரவாரத்தை உடைய ஒளி பொருந்திய நெற்றியை உடைய,
 கணவனையிழந்த மனைவி மார்கள் விதவைக் கோலம் அடைந்து,
அழகிய கருமணலை ஒத்த அந்த மெல்லிய குவிந்த கரிய கூந்தலை அறுத்துக் கொண்டதைக் கண்டு நீ போரை நிறுத்தியதால்,
நன்கு காய்ச்சிப் பற்ற வைக்கப்பட்ட வலிமையாக வேலின் இலை
மற்றும் எறிபிடியின் மூட்டு உடைபட்டுச் சிதையாமல் தப்பித்தது உனது வேல் அல்லவா செழியனே!

Description: (A Song About Paandiyan Nedunjcezhiyan)

To remove the darkness in the sky where the stars are shining , the hot sun goes fast.
It does not change its nature. The hot sun with the cold moon comes down to the earth.

Like the hot sun oh Sezhiyaa!
You have killed two kings who have much strength and those who have sworn in the fierce battle field
and captured their drums seeing the ladies who are beating their chests and weeping with their spreading black hair because their husbands are killed,
you are like the cold moon.

On seeing their sorrow, your spear does not spring on your enemies' bodies. It will not kill them.
-Kallaadanaar



No comments: