Tuesday, February 16, 2016

புறநானூறு - 23. நண்ணார் நாணுவர்!

புறநானூறு - 23. நண்ணார் நாணுவர்!

பாடியவர்: கல்லாடனார்.
பாடப்பட்டோன்: பாண்டியன் தலையாலங் கானத்து நெடுஞ்செழியன்.
திணை: வாகை. 
துறை: அரச வாகை; நல்லிசை வஞ்சியும் ஆம்.


வெளிறி னோன்காழ்ப் பணைநிலை முனைஇக் 
களிறுபடிந் துண்டெனக் கலங்கிய துறையும் 
கார்நறுங் கடம்பின் பாசிலைத் தெரியற் 
சூர்நவை முருகன் சுற்றத் தன்னநின் 
கூர்நல் லம்பிற் கொடுவிற் கூளியர் 

கொள்வது கொண்டு கொள்ளா மிச்சில் 
கொள்பத மொழிய வீசிய புலனும் 
வடிநவில் நவியம் பாய்தலி னூர்தொறும் 
கடிமரந் துளங்கிய காவு நெடுநகர் 
வினைபுனை நல்லில் வெவ்வெரி நைப்பக்

கனையெரி யுரறிய மருங்கு நோக்கி 
நண்ணார் நாண நாடொறுந் தலைச்சென் 
றின்னு மின்னபல செய்குவன் யாவரும் 
துன்னல் போகிய துணிவி னோனென 
ஞால நெளிய வீண்டிய வியன்படை 

ஆலங் கானத் தமர்கடந் தட்ட 
கால முன்பநிற் கண்டனென் வருவல் 
அறுமருப் பெழிற்கலை புலிப்பாற் பட்டெனச் 
சிறுமறி தழீஇய தெறிநடை மடப்பிணை 
பூளை நீடிய வெருவரு பறந்தலை

வேளை வெண்பூக் கறிக்கும் 
ஆளி லத்த மாகிய காடே. பொருளுரை: 

மென்மையாக இல்லாத, வலிமையான வயிரம் பாய்ந்த கட்டுக் கம்பத்தையுடைய கூடத்தில் நிற்பதை வெறுத்த யானைகள் 
இறங்கி நீருண்டதால் பகைவர் நாட்டு நீர்த்தேக்கங்கள் கலங்கி உள்ளன. கார்காலத்து மணம் வீசும் கடம்பின் பசுமையான இலையோடு விரவிய மாலையை அணிந்து,
சூரபத்மனைக் கொன்ற முருகனது கூளிச் சுற்றத்தைப் போல, நல்ல கூர்மையான அம்பையும், வளைந்த வில்லினை யும் உடையவர்களாகிய உனது மறவர்கள்; 

தமக்குத் தேவையானவைகளை எடுத்துக் கொண்டு தேவையில்லாத பிற பொருட்களை பிறர் எடுத்து உணவாகப் பயன்படுத்தாதபடி அழிக்கப்பட்ட நிலங்களையும், 
சிறப்பாக வடிவமைக்கப்பட்ட கோடாரி வெட்டுவதால் ஒவ்வொரு ஊர்களிலும் காவல் மரங்கள் வெட்டி காடுகள் அழிக்கப்பட்டிருக் கின்றன. 

பெரிய நகரங்களில் தொழில்கள் செய்யப்படும் நல்ல இல்லங்களில் விருந்தோம்பல் முதலிய நற்செயல் குறித்த சோறிடும் தீயை அணைத்துக் கெடுத்தும் 
மிகுதியான நெருப்பால் எரிந்து கொண்டிருக்கும் மருங்கிலுள்ள பிற இடங்களையும் பார்த்து பகைவர் வெட்கப்பட்டுக் கலங்குகிறார்கள். 

நாள்தோறும் அவரிடத்துச் சென்று இன்னமும் இதுபோல பல தீமைகள் செய்வேன் என்றபடி பகைவர் யாவரும் தன்னை நெருங்க முடியாத சூழ்ச்சித் 
திறனுடைய துணிவுடையவன் எனக் கருதி உலகமே கொள்ளாத அளவு திரட்டிய பெரும்படையுடன் தலையாலங்கானத்தில் போரில் எதிர் நின்று கொன்ற காலன் போன்ற வலிமை உடையவனே! 

கொம்பை இழந்த பெரிய கலைமான், புலியிடம் சிக்கி உயிரிழந்ததால் தன் சிறிய மான்குட்டியை அணைத்துக் கொண்டு, 
துள்ளிய நடையுடைய மெல்லிய பெண் மான் பூளைச்செடிகள் வெகுவாக வளர்ந்துள்ள அஞ்சத்தக்க பாழிடத்தில் 
வேளைச் செடியின் வெண்மையான பூக்களைத் தின்கின்ற ஆட்கள் நடமாட்டம் இல்லாத பாலைநிலக் காட்டு வழியே உன் செயல்களைக் கண்டவனாக வருகின்றேன். 


Description: (A Song About Thalaiyaalangkaanaththuch Seruvendra Paandiyan Nedunjchezhiyan)

The elephants which hated being tied to strong pillars went to the water sources, stirred them and destroyed them. 
You warriors have sharp arrows and bent bows like that of god Murugan who had worn fragrant kadambaa garland and had a sharp vel which killed Sooran.

Your warriors took as much grain as they could and left the rest in vain in the fields itself. 
The forests cut down by axes and the fire that was lighted in the homes to cook the food were destroyed by the big fire lighted by your warriors. 

On seeing this, your enemies feared and trembled. You did some more cruelties to your enemies. 

I knew that you have so much of strength so that your enemies feared to come near you. 
You have such a big army that the earth cannot bear it. 

You won the battle which took place in Thalaiyaalangkaanam. 
You are having a strength like that of Yamma. 

I came to see you. On my way, I saw a female deer embracing its young one near the poolai bush after loosing its mate which was killed by a tiger.
 It ate the white flowers of the velai plant. The way through which I came was barren and there was no one. 

I came through that long path, seeing the sorrowful sight of the female deer. -Kalladanaar


முலம்:

http://thamizhanna.blogspot.in/2010/06/purananooru-16-to-25-english.html
No comments: