Saturday, February 6, 2016

புறநானூறு - 13. நோயின்றிச் செல்க!

புறநானூறு - 13. நோயின்றிச் செல்க!

பாடியவர் : உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்.
பாடப்பட்டோன் : சோழன் முடித்தலைக் கோப்பெருநற்கிள்ளி.
திணை : பாடாண். 
துறை : வாழ்த்தியல் 

இவன் யார்? என்குவை ஆயின், இவனே,
புலிநிறக் கவசம் பூம்பொறி சிதைய,
எய்கணை கிழித்த பகட்டுஎழில் மார்பின்,
மறலி அன்ன களிற்றுமிசை யோனே;
களிறே, முந்நீர் வழங்கு நாவாய் போலவும்,

பன்மீன் நாப்பண் திங்கள் போலவும்,
சுறவு இனத்து அன்ன வாளோர் மொய்ப்ப,
மரீஇயோர் அறியாது, மைந்துபட் டன்றே;
நோயிலன் ஆகிப் பெயர்கதில் அம்ம!
பழன மஞ்ஞை உகுத்த பீலி

கழனி உழவர் சூட்டொடு தொகுக்கும்,
கொழுமீன், விளைந்த கள்ளின்,
விழுநீர் வேலி நாடுகிழ வோனே.

பொருளுரை: 

இவன் யார் என்று கேட்பாயானால், இவன்தான் புலியின் தோலால் செய்யப்பட்ட கவசத்தின், 
பொலிவுடைய தோலினது இணைப்பு பிளவுபட எய்த அம்புகள் கிழித்த பரந்த அழகுடைய மார்பினை உடையவனும், 
கூற்றம் போன்ற மதம் பிடித்த களிற்றின் மேலே உள்ளவனும் அமர்ந்திருக்கும் இக்களிறு
எதிரிப் படையைக் கிழித்தோடலில் கடலில் நீரைக் கிழித்து இயங்கும் மரக்கலத்தைப் போலவும் 
பல விண்மீன்கள் புடைசூழ நடுவே மையமாக வானில் பவனி வரும் நிலவு போலவும்
சுறாவின் இனத்தை ஒத்த வாள் மறவர்கள் பரபரவெனச் சுற்றிச் சூழ தன்னை மருவி வழி நடத்திச் செல்லும் பாகர்களை அறியாமலும் மதம் பிடித்துத் திரிகிறதே! 

வயல் வெளிகளில் மயில்கள் உதித்த பீலியால் வயலில் உள்ள உழவர்கள் நெற்சூட்டுடனே திரட்டும் நன்கு கொழுத்த மீன்களையும், 
புதிதாக இறக்கப்பட்டுப் பதமான கள்ளையும், மிகுந்த செழுமையான நீர் நிறைந்த வயல்களையும் உடைய சோழ நாட்டுக்கு உரிய தலைவனும் மன்னனும் ஆவான்! 
இச்சோழ மன்னன் எந்தத் தீங்கு நேராமலும் நோய்வாய்ப் படாமலும் நலமாகப் போய்ச் சேரவேண்டும், ஐயா! 

Description: (A Song About Seramaan Andhulanjcheral Irumporai)

If you ask who is he, he is Kopperunarkilli, wearing an armor made up of tigers' skin which is torned by arrows. 
He has a shinning beautiful chest. He will come on an elephant which kills the enemies like Yama. 
This elephant which belongs to him is like a ship which goes in the sea. It is like the moon amidst several stars. 
Now it is mad and it cannot be controlled by its driver and goes while the warriors with swords have surrounded it like sharks. 

He who on the elephant is the king of the country where the farmers collect the feathers of the peacock which are withered away in the field along with the paddy. 
There are fatty fishes. There is thick toddy. His fertile country is surrounded by water.
 Oh Seramaan! Let him go without any harm.


முலம்:

http://eluthu.com/kavithai/123360.html

http://thamizhanna.blogspot.in/2010/05/purananooru-first-15-songs-english.html



No comments: