Friday, February 5, 2016

புறநானூறு - 12. அறம் இதுதானோ?

புறநானூறு - 12. அறம் இதுதானோ?

பாடியவர் : நெட்டிமையார்.
பாடப்பட்டோன் : பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி.
திணை : பாடாண். 
துறை : இயன்மொழி. 

பாணர் தாமரை மலையவும், புலவர்
பூநுதல் யானையோடு புனைதேர் பண்ணவும்,
அறனோ மற்றஇது விறல்மாண் குடுமி!
இன்னா ஆகப் பிறர் மண் கொண்டு,
இனிய செய்தி நின் ஆர்வலர் முகத்தே?

பொருளுரை: 

வெற்றிப் பெருமிதம் உடைய குடுமி அரசே! 

வேற்றரசருடைய நாட்டைப் போரிட்டு அவர் வருந்தும்படி அபகரித்துக் கொண்டு, அங்கிருந்து பெற்ற செல்வத்தால் 
பொன்னால் தாமரைப்பூ செய்து வெள்ளியாற் செய்த நாரிடைத் தொடுத்த பொன்னரிப்பூ மாலையைப் பாணர் பெற்றுச் சூடவும், புலவர்க்குப் பட்டம் அணிந்த மத்தகத்தையுடைய யானையுடன், ஏறிச் செல்வதற்கு அலங்கரிக்கப்பட்ட தேரினை நல்கியும் உன்னை அன்பு செய்து பரவிப் புகழ்வாரின் முகத்தில் இன்பமான மகிழ்ச்சியைத் தருகிறாய். இது உனக்கு அறனோ சொல்வாயாக! என்று வஞ்சப்புகழ்ச்சியாகப் பாண்டியன் முதுகுடுமிப் பெருவழுதியை நெட்டிமையார் வாழ்த்துகிறார். 


Description:(A Song About Palyaaha Saalai Mudhukudumip Peruvazhudhi)

The male singers wear garlands made up of golden lotuses tied by silver string. 
Poets get elephants with golden ornaments on their foreheads and adorned chariots. 
Oh Kudumi! You have strength and noble qualities. 
Is it right to capture others' country by torturing them and to do pleasant deeds to those who are king to you? -Nettimaiyaar

முலம்:

http://eluthu.com/kavithai/123058.html

http://thamizhanna.blogspot.in/2010/05/purananooru-first-15-songs-english.html



No comments: