Sunday, December 14, 2014

பாய்


ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு விதமான உடம்பு உபாதைகள் கொண்டு இருக்கின்றார், அதை நீக்குவதற்கு நாம் தூங்கும் படுக்கை கூட உதவி செய்யும் தெரியுமா ?
 படுக்கைகள் பலவிதம்.
 எத்தகைய படுக்கையில் படுத்து உறங்கினால் என்ன பலன் ஏற்படும் என்பதை "மருத்துவ திறவுகோல்' என்னும் சித்த மருத்துவ நூல் விளக்கியுள்ளது.

 கம்பளிப் படுக்கை- குளிருக்கு இதம். குளிர் சுரம் நீங்கும்.
 கோரைப்பாய்- உடல் சூடு, மந்தம், சுரம் போக்கும், உடலுக்குக் குளிர்ச்சியும், உறக்கமும் ஏற்படும்.
 பிரம்பு பாய்- சீதபேதி, சீதளத்தால் வரும் சுரம் நீங்கும்.
 ஈச்சம்பாய்- வாதநோய் குணமாகும். உடல் சூடு, கபம் இவை அதிகரிக்கும்.  மூங்கில் பாய்- உடல் சூடும், பித்தமும் அதிகரிக்கும்.
தாழம்பாய்- வாந்தி, தலை சுற்றல், பித்தம் நீங்கும்.
பேரீச்சம்பாய்- வாதகுன்மநோய், சோகை நீங்கும். ஆனால் உடலுக்கு அதிக உஷ்ணம் தரும்.
இலவம்பஞ்சு படுக்கை- உடலில் ரத்தம், தாது பலம் பெறும். தலை முதல் பாதம் வரையிலான அனைத்து நோய்களும் நிவாரணம் பெறும்.  மலர்ப்படுக்கை- ஆண்மை அதிகரிக்கும். நன்றாகப் பசியெடுக்கும்.
இரத்தினக் கம்பளம்- நஞ்சுகளின் பாதிப்பால் ஏற்படும் நோய்களை நீக்கும் இன்று நாம் பாய் என்பதை நமது உடல் நலம் பார்த்து வாங்குகிறோமா என்ன ?

http://www.kadalpayanangal.com/2014/12/1.html

No comments: