Thursday, December 25, 2014

கருப்பா இருக்கும் முழங்கையை வெள்ளையாக்க

புதினா:

1/2 கப் தண்ணீரில் புதினாவை சேர்த்து கொதிக்க விட்டு, பின் அதில் பாதி எலுமிச்சையை பிழிந்து, அந்த நீரை முழங்கையில் தடவி 10-15 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், அப்பகுதியில் உள்ள இறந்த செல்கள் நீங்கி, விரைவில் முழங்கையானது வெள்ளையாகும்

சர்க்கரை மற்றும் ஆலிவ் ஆயில்: 

சர்க்கரை மற்றும் ஆலிவ் ஆயிலை சரிசமமாக எடுத்து, அதனை பேஸ்ட் போல் கலந்து, முழங்கையில் தடவி 5 நிமிடம் தேய்த்து, 5 நிமிடம் ஊற வைத்து, பின் மைல்டு சோப்பு பயன்படுத்தி கழுவ வேண்டும். இதன் மூலம் முழங்கையில் உள்ள கருமை மறையும்

தேங்காய் எண்ணெய்:

ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய் மற்றும் 1/2 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, முழங்கையில் தடவி 15-20 நிமிடம் ஊற வைத்து, பின் துடைத்து எடுக்க வேண்டும். இதனால் முழங்கையில் வறட்சி நீங்கி, முழங்கை மென்மையாக இருக்கும்.



http://www.onlytamil.in/2014/12/blog-post_60.html

No comments: