Saturday, November 1, 2014

பரிசுகள் மூலம் கிடைக்கும் வரிச் சலுகைகள்



1) கிஃப்ட் ரூ.50,000 வரை வரி கிடையாது

2) நெருங்கிய உறவினர்கள் தரும் ரொக்கம் அல்லது பொருள் பரிசுக்கு வரி கிடையாது
உதாரணம்: வீடு வாங்க,  உங்களுடைய அப்பா/அம்மா/சகோதர/சகோதரிகள் உங்களுடைய வங்கிக் கணக்கில் ரூ.20 லட்சம் செலுத்தினால், அதற்கு வரி கிடையாது. ஆனால், பிற்காலத்தில் வீடு எப்படி வாங்கப்பட் டது என்ற கேள்வி எழும்போது அதற்கு உண்டான சரியான தஸ்தாவேஜுகளை (Documents)  ஏற்படுத்தி வைத்துக் கொள்வது நல்லது.
உறவினரிடம் அல்லது குடும்ப உறுப்பினர்களிடம் ரொக்கமாகவோ / பொருளாகவோ பரிசு வாங்கும்போது அதை  உறுதிப்படுத்துகிற  வாக்குமூலம் (Confirmatory Affidavit) பரிசு பெற்றவர் மற்றும் கொடுப்பவரின் கையொப்பத் துடன் இருப்பது நல்லது.
3) கல்யாண பரிசாக ரொக்கமோ / பொருளோ எவ்வளவு பெற்றாலும் வரி கிடையாது.
4) உறவினர் களிடமிருந்து மனை, வீடு போன்ற அசையாச் சொத்துகள் பரிசாக வந்தால் வரி கிடையாது. இதற்கு உச்சவரம்பு எதுவும் கிடையாது.
5) சொத்து உயில் மூலமும்/பரம்பரையாகவும் வந்தாலும்  வரி கிடையாது.



No comments: