Friday, October 31, 2014

தானியங்கி பணம் வழங்கும் இயந்திரத்தில் (ATM) செய்யும் பரிவர்த்தனை

தானியங்கி பணம் வழங்கும் இயந்திரத்தில் (ATM) செய்யும் பரிவர்த்தனைக்கான புதிய விதிகள்

http://blog.bankbazaar.com/rbi-relaxes-norms-on-using-other-bank-atms/


For people living in Metropolitan cities including Mumbai, Delhi, Bengaluru, Chennai, Hyderabad and Kolkata:
BankTransaction TypeTransaction Limit
Same Bank
  • Cash Withdrawal
  • Balance Enquiry
  • Change of PIN
  • Mini Statement
5 free transactions per month. Additional transaction will be charged at Rs. 20 per transaction.
Different Bank
  • Cash Withdrawal
  • Balance Enquiry
  • Change of PIN
  • Mini Statement
3 free transactions per month. Additional transaction will be charged at Rs. 20 per transaction.
Different Bank in Non Metro Centers
  • Cash Withdrawal
  • Balance Enquiry
  • Change of PIN
  • Mini Statement
2 free transactions per month.

Tuesday, October 28, 2014

குழந்தை நோய் எதிர்ப்புக்கான தடுப்பு உசி அட்டவினை


குழந்தை நோய் எதிர்ப்புக்கான தடுப்பு உசி அட்டவினை  தரும் குறுந்செய்தி சேவைப் பற்றிய இணையத்தளம்

http://www.immunizeindia.org/

Saturday, October 25, 2014

சொத்து/நிலம் பற்றிய சந்தேகங்கள்



கீழ்கண்ட இணையத்தளத்தில் சொத்து/நிலம்  பற்றிய பல தகவல்கள் / சந்தேகங்களை திர்க்கும் பொருட்டு தளம் அமைந்து உள்ளது


அ) சொத்து இருக்கும் கோர்ட்டில் ஏதாவது டாக்குமெண்ட்கள் இருக்கின்றதா என்று ஆராய்ந்தேன். அங்கு இந்தச் சொத்தினை யாருக்கும் விற்க கூடாது என்று தடையாணை இருந்தது. அது எதுவும் வில்லங்கச் சான்றிதழில் வரவில்லை.

ஆ) சுப்ரீம் கோர்ட்டில் பதிவு செய்யப்படாத அக்ரிமெண்ட்டை ஆவணமாகக் கூட கருதமுடியாது என்று ஒரு வழக்கு தள்ளுபடி ஆகியிருக்கிறது


http://thangavelmanickadevar.blogspot.in/2014/10/13.html



Friday, October 24, 2014

தேர் பற்றிய நிறைய தகவல்கள்


திருவாரூரில் தேர் திருவிழா என்பது ஒவ்வொரு சித்திரை மாதத்திலும் நடைபெறும். தேர் திருவிழாவின் நோக்கம் என்பது என்ன தெரியுமா ? கோயிலுக்குச் சென்று இறைவனை வழிபட இயலாத முதியவர்கள், நோயாளிகள் ஆகியோருக்காக இறைவனே கோயில் விமானம் போன்ற அமைப்புடைய தேரில் ஒளி ஏற்றி அவர்களின் இல்லம் தோறும் சென்று அருள் வழங்கும் முகமாகத் தேர்த் திருவிழாக்களைச் சான்றோர்கள் ஏற்படுத்தினர். பெரும்பாலும் அனைத்து ஊர்களிலும் உள்ள கோயில்களில் வருடத்தில் ஒரு முறையாவது பிரம்மோத்சவ விழா (பத்துநாள்) சிறப்பாக நடைபெறும். விழாவின் போது எட்டாவது நாள் அன்று இறைவன் தேரில் உலா வரும் நிகழ்ச்சி நடைபெறும். ஆனால் தில்லையில் (சிதம்பரம்) மட்டும் நடராசப் பெருமாள் இரண்டு முறை திருவீதியுலா (ஆனி, மார்கழி) வருகிறார். திருத்தேரின் வடம் பிடித்துத் தேரினை இழுப்பதால் கயிலையிலும், வைகுந்தத்திலும் இடம் கிடைக்கும் என்று மக்கள் நம்புகின்றனர்.



ஊரும் உணவும்

ஆற்காடு: மக்கன் பேடா  (S.கண்ணன் ஸ்வீட் லேன்ட் அல்லது செட்டியார் கடை )  http://www.kadalpayanangal.com/2014/10/blog-post_15.html


மன்னார்குடி:  பேரிச்சை அல்வா   (டெல்லிஸ்வீட்ஸ்)  http://writersamas.blogspot.in/2013/03/blog-post_16.html

பெங்களூர்:  மசாலா டீ  ( "சாய் பாயிண்ட்)  http://www.chaipoint.com/
முதலூர் : மஸ்கோத் அல்வா http://www.kadalpayanangal.com/2014/11/blog-post_5.html
மதுரை: கிழங்கு பொட்டலம் http://www.kadalpayanangal.com/2014/12/blog-post_4.html

மதுரை: பாரம்பரிய உணவு உழவன்  உணவகம். (மதுரை நத்தம் சாலையில் ரிசர்வ் லைன் அருகே மகளிர் மேம்பாட்டு திட்டக் கட்டிடத்தில்)
 http://tamil.thehindu.com/general/environment/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%89%E0%AE%B4%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/article6668010.ece

சென்னை: டவுசர் ஹோட்டல் (அசைவம்)   (மந்தைவெளி பஸ் ஸ்டான்ட் சென்று அங்கு இருந்து RK மட் ரோடில்)  http://www.kadalpayanangal.com/2015/01/blog-post_29.html

நாகர்கோவில்: ரசவடை (வடசேரியில் இருக்கும் கௌரி சங்கர் ஹோட்டல்)

ஈரோடு: UBM கெடா விருந்து
சேலம்:  ஹோட்டல் உஷாராணி (அசைவம்), சேலம் பஸ் ஸ்டாண்ட்டில் இருந்து சுமார் 25 கிலோமீட்டர் தூரத்தில், காக்காபாளையம் முன்னர் ஒரு U டர்ன் செய்தால் இளம்பிள்ளை ஊருக்கு செல்லும் ரோட்டில் சென்றால் வரும் ஒரு ஊர் என்பது இந்த வேம்படிதாளம். http://www.kadalpayanangal.com/2015/09/blog-post.html

சேலம், ஜங்ஷன் மெயின் ரோட்டில் இருக்கும்  `கலியுகா உணவக’த்தில்தான் இந்த அதகள, அமர்க்கள களி விருந்து. 
https://www.vikatan.com/anandavikatan/2018-apr-11/serials/139658-food-kaliyuga-hotel-in-salem.html

வேலாயுதம்பாளையத்தில், கரூர்-சேலம் பைபாஸ் சாலையில் இருக்கிறது ‘கதிர்வேல் வாத்துக்கடை.’
https://www.vikatan.com/anandavikatan/2018-apr-04/serials/139502-kathirvel-vaathu-kadai-karur.html

நியூயார்க்: அமெரிக்காவின் நியூயார்க் நகரில், திருக்குமார் கந்தசாமி என்பவரது தோசைக்கடைதான் ஃபேமஸோ, ஃபேமஸ் http://www.vikatan.com/timepassvikatan/2016-jul-23/world-news/121207-dosa-shop-in-america.art 










Thursday, October 23, 2014

வேலை தேட உதவும் இணையத் தளம்

The Pragnya meter score is saved to the company’s database along with the candidate’s details, making it easier for employers to search for specific skills and qualifications.


http://yourstory.com/2014/10/wisdom-jobs/
http://www.wisdomjobs.com/


http://sheroes.in/   பெண்களுக்கான இணையதளம்

https://hiree.com/ 

http://cajobportal.com/   CA







Tuesday, October 21, 2014

பொது நலன் வழக்கு மனுப் போடும் வழிமுறைகள்


உதவித் தொகை: பெண்களுக்கான உதவித் தொகை

http://scholarship-positions.com/fair-lovely-foundation-scholarship-women-india-2014/2014/10/17/

http://www.clinicplus.in/Scholarship.aspx


In order to be eligible for the 2017 Adobe India Women in Technology Scholarship, applicants must meet all of the following criteria:  
  • Be a female student currently enrolled at a university for the 2016-2017 academic year.
  • Intend to be enrolled as a full-time student at a university for the 2017-2018 academic year.

http://www.adobe.com/careers/university/india-women-tech.html


Ericsson Empowering Girl Scholarship Programme

Aims to support meritorious girls students.

Eligibility: Applicants must be currently in the second year of Engineering (IT/CS) or MBA programmes at reputed colleges in India; must have scored at least 6.5 GPA or equivalent in the previous final exam. Annual family income must not be more than ₹6 lakhs.

Rewards: ₹75,000 per year

Application: Online

Deadline: November7

b4s.in/edge/EEGS13




Monday, October 20, 2014

வீடில்லாத புத்தகங்கள் - 2

இன்று நாம் பிரிட்டிஷார் அறிமுகம் செய்த ஆங்கிலவழிக் கல்வியை உயர்த்திப் பிடிக்கிறோம். ஆனால், 1787-ல் சென்னைக்கு வந்த டாக்டர் ஆண்ட்ரூ பெல், சென்னை எக்மோரில் செயல்பட்ட அநாதைகள் காப்பகத்தில் கல்விப் பணியாற்றியபோது, தான் கற்றுக்கொண்ட கல்வி முறையை இங்கி லாந்துக்கு எடுத்துச் சென்று, ‘மெட்ராஸ் சிஸ்டம்’ என்று அறிமுகம் செய்து பிரபமலமாக்கியுள்ளார். அந்த வரலாற்று நிகழ்வை இந்நூல் விவரிக்கிறது.
‘மெட்ராஸ் சிஸ்டம்’ என்பது தாய்மொழியில் கல்வி கற்க வேண்டும் என்பதாகும். அத்துடன் வகுப்பில் படிக்கும் சிறந்த மாணவனைக் கொண்டு மற்ற மாணவர்களுக்குப் பாடம் கற்பிக்கும் முறையாகும். சட்டாம்பிள்ளை என அழைக்கப்படும் புத்திசாலி மாணவன் வகுப்பில் உள்ள மற்ற மாணவர்களுக்குப் பாடம் சொல்லித் தருவான். இப்படி ஆசிரியர், சட்டாம்பிள்ளை இருவரும் இணைந்து கற்பிக்கின்ற காரணத்தால் படிப்பு எளிதாக அமைந்தது.
இந்த முறையை ஆண்ட்ரூ பெல் இங்கிலாந்தில் அறிமுகம் செய்து வெற்றிகரமாக நடத்திக் காட்டினார். இவர் மதராஸ் மீது கொண்ட அன்பின் காரணமாக, இங்கிலாந்தில் தான் வாங்கிய பண்ணைக்கு எக்மோர் என பெயரிட்டிருக்கிறார். ஆண்ட்ரூ பெல் 13 பள்ளிகளை நடத்தியிருக்கிறார். இந்தப் பள்ளிகளின் வெற்றியைத் தொடர்ந்து, இங்கிலாந்து முழுவதும் 230 பள்ளிகளில் ‘மெட்ராஸ் சிஸ்டம்’ பரவியது.
மெட்ராஸ் கல்விமுறையைப் பற்றி ஆண்ட்ரூ பெல் புத்தகம் ஒன்றையும் எழுதியிருக்கிறார். ‘நமது கல்விமுறை இங்கிலாந்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட வரலாறு நமக்கு மறந்துபோய், அவர்களுடைய கல்வியை நாம் தூக்கிப் பிடித்துக்கொண்டிருக்கிறோம்’ என்பது காலக்கொடுமை.
சென்னையை ஆண்ட பிரிட்டிஷ் கவர்னர்களின் வரலாற்றை ஒருசேர வாசிக்கும்போது, ‘சுயலாபங்களுக்காக நாட்டைக் கொள்ளையடித்தவர்கள் முடிவில் மாபெரும் வீழ்ச்சியை சந்தித்தார்கள்’ என்பதைத் தெளிவாக உணர முடிகிறது. நின்று கொல்லும் நீதி என்பது 







அசத்தலான அழகுக்கு

அசத்தலான அழகுக்கு!
தினமும் தண்ணீரில் வேப்பிலைகளைப் போட்டு 10 நிமிடங்கள் கழித்துக் குளிக்கலாம். இது சருமத்துக்கு எந்தப் பாதிப்பும் வராமல் காக்கும்.  வாரம் இருமுறையாவது சோப்புக்குப் பதிலாக கடலைப் பருப்பு, பாசிப் பயிறு போன்றவற்றை அரைத்துக் குளிக்கலாம்.
வாரம் ஒரு முறை பப்பாளிப் பழத்தை நன்றாகப் பிசைந்து, அந்தக் கூழை முகத்தின் மீது பூசி 15 நிமிடங்கள் உலரவைத்து பின் குளிக்கலாம். இது சருமத்துக்கு மிருதுத்தன்மையைக் கொடுக்கும்.
இரு வாரங்களுக்கு ஒரு முறையேனும் தலைக்கு நல்லெண்ணெய் தேய்த்துக் குளிப்பதன் மூலம் உடல் குளிர்ச்சி அடையும். 
வாரம் ஒரு முறை பால், பாதாம் அல்லது பிஸ்தா பருப்புடன் சிறிதளவு மஞ்சள் கலந்து முகத்தின் மீது 15 நிமிடங்கள் பூசிவிட்டுக் குளித்தால் மிகவும் நல்லது.
வெளியில் சென்றுவிட்டு வந்த பிறகு, கெட்டியான மோரில் ஒரு வெள்ளைத் துணியை நனைத்து முகத்தின் மீது அப்படியே 10 நிமிடங்கள் வைத்திருப்பது புத்துணர்ச்சியைத் தரும். 
மாதம் ஒரு முறை முகத்துக்கு மசாஜ் செய்வது, ஆவி பிடிப்பது, நீராவிக் குளியல்போடுவது மிகவும் நல்லது.
கிரீம்கள் மற்றும் பவுடர்கள் வியர்வை வெளியேறுவதைத் தடுப்பதால், தோல் நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே இவற்றைத் தவிர்ப்பது நல்லது.
தினமும் அதிகாலையில் எழுந்திருப்பது, சூரிய ஒளிக்கதிர்கள் படுமாறு 20 நிமிடங்கள் ஆசனங்கள் செய்வது போன்றவை மனதுக்கும் உடலுக்கும் புத்துணர்ச்சி அளிக்கும்.

தத்து எடுத்தல் நடைமுறைகள்



2013வில் EAயின் கார் நிறுத்தும் இடத்தில் நடந்த திருட்டைப் பற்றிய கட்டுரை


http://www.thehindu.com/news/cities/chennai/night-at-the-mall-how-my-laptop-vanished-into-thin-air/article4147713.ece?ref=relatedNews

http://www.thehindu.com/news/cities/chennai/night-at-the-mall-the-journey-from-a-csr-to-an-fir/article4154410.ece

http://www.thehindu.com/news/cities/chennai/night-at-the-mall-the-phantom-in-the-video/article4151422.ece?ref=relatedNews


தொடர்புடைய கட்டுரைகள்:
http://www.thehindu.com/news/cities/chennai/chen-crime/trouble-filing-an-fir-call-the-new-police-helpline/article6075882.ece?ref=relatedNews





Sunday, October 19, 2014

வீடு கட்ட அனுமதி அளிக்கும் சான்றிதழ் பெறும் வழிமுறைகள்


முதல் தகவல் அறிக்கை பெறும் வழி


காலையில் என்ன பருகலாம்



தண்ணீர்: ஒருநாள் முழுவதும் குடிக்க வேண்டிய தண்ணீரில் கால் பங்கு நீரை, காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் அரை மணி நேரத்துக்குள் குடிக்க வேண்டும்.

குளிர்ந்த நீரைப் பருகுவது நல்லதே. ஏனெனில் குளிர்ந்த நீருக்கு அசிடிட்டியைக் குறைக்கும் தன்மை, வெந்நீரைக் காட்டிலும் அதிகம்.


நன்றி / மேலும் படிக்க :

https://ta-in.facebook.com/dailythanthinews/photos/a.770136709669611.1073741828.630553376961279/961731637176783/

டாக்டர் விகடன்



Wednesday, October 15, 2014

விதவிதமான டிபன் பாக்ஸ்; விபரீதம் தெரியுமா?


பிளாஸ்டிக்குகளில் இருந்து, பி.பி.ஏ., (பிஸ்பீனல்-ஏ- bisphenol-a) எனப்படும், வேதிப்பொருள் உருவாகும். இது, 'ஹார்மோன்' பாதிப்பை ஏற்படுத்தும். நரம்பு சார்ந்த பிரச்னைகளை உருவாக்கும்.

தொடர்ந்து பயன்படுத்துவதால், எடை கூடும், நீரிழிவு பாதிப்பு வரும். குறைந்த வயதிலேயே, பெண்கள் பூப்பெய்தி விடவும் வாய்ப்புள்ளது. 'பெட்' (பாலி எத்திலின் டேரப்தலேட்) பாட்டில் என்கிறோம். இதில், 'டை- எத்தில் - ஹைட்ரக்சில் அமைன் (டேகா) என்ற ரசாயனப் பொருள் கலந்துள்ளது. இது, புற்றுநோய்க்கான வேதிப்பொருள். பாட்டிலை மீண்டும் மீண்டும் பயன்படுத்துவதாலும், வெந்நீரை ஊற்றி வைத்து பருகுவதாலும், 'டோகா' தண்ணீரில் கலந்து, உடலுக்குள் செல்கிறது; இதுவும் ஆபத்தே. 

'பி.பி.ஏ., பாதிப்பு இல்லாத, உணவுப் பொருட்களை வைத்தால், சூடாகாத பிளாஸ்டிக் டப்பாக்கள் (புட் கிரேடு) பயன்படுத்த வேண்டும். டப்பா, பாட்டில்கள் வாங்கும்போது, இதுபற்றிய குறிப்புகள் உள்ளதா என, பார்த்து, தரமானதாக வாங்க வேண்டும்.




மேலும் படிக்க:  http://www.dinamalar.com/supplementary_detail.asp?id=22286&ncat=11

http://healthychild.org/easy-steps/know-your-plastics/
http://www.medimanage.com/my-diet/articles/water-is-good-but-the-bottles-are-not.aspx

Sunday, October 12, 2014

படித்ததில் பிடித்தது


http://unmaiyanavan.blogspot.in/2014/08/why-speak-tamil.html


“கொம்பிலுள்ள மந்திக்கோர் வாலிரண்டு  நின்றுறையும்
கம்பமத யானைக்குக் கால்களெட்டு – எம்பியுண
காட்டில் திரியும் கரடிக்கோர் வாயைந்து
ஆட்டிற்(கு) இருபது கால் “

http://oomaikkanavugal.blogspot.com/2014/10/blog-post_14.html#more



செடி, கொடிகளுக்கும் உயிரும், உணர்வும் உண்டு



“எல்லா உயிரினங்களுக்கும் உள்ள உயிர் ஒன்றே; மனித உயிரும் அத்தகையதே; எனவே அனைத்து உயிரினங்களும் பொறுமை, ஒற்றுமை, இணைந்து வாழ்தல் ஆகியவற்றைக் கடைபிடிக்க வேண்டும். இதில் மனிதர்களின் பங்கு மகத்தானது. எல்லா நாட்டு மக்களும் ஒருவர் மீது ஒருவர் பகைமை பாராட்டாமல், அவநம்பிக்கை கொள்ளாமல் வாழக் கற்றுக்கொள்ள வேண்டும்.”


மேலும் படிக்க :  http://karanthaijayakumar.blogspot.com/2014/10/blog-post.html,

 http://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AE%95%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B7%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0_%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B8%E0%AF%8D

Friday, October 10, 2014

வறுமை பற்றிய பாடல்

மேலும் படிக்க :  http://oomaikkanavugal.blogspot.com/2014/09/blog-post_22.html


ஆவீன மழைபொழிய இல்லம் வீழ

      அகத்தடியாள் மெய்நோக அடிமை சாக

மாவீரம் போகுதென்று விதைகொண் டோட

      வழியிலே கடன்காரன் மறித்துக் கொள்ள

சாவோலை கொண்டொருவன் எதிரே தோன்ற

      தள்ளொண்ணா விருந்துவர சர்ப்பம் தீண்ட

கோவேந்தர் உழுதுண்ட கடமை கேட்க

      குருக்கள்வந்து தட்சணைதான் கொடு என்றாரே “

படித்ததில் பிடித்தது


பண் இசைத்துப் பாடுபவன் பாணன். அவன் மனைவி பாணி. பாட்டுப்பாடி கிடைப்பதைக் கொண்டு வாழ்க்கை நடத்துவதுதான் அவர்கள் தொழில்.
அவர்களை வாழவைத்த தர்மப்பிரபுக்களும் அன்று இருந்திருக்கிறார்கள்.
தன் வறுமையைப் போக்க ராமன் என்கிற வள்ளலைப் பார்த்துப் பரிசில் பெற்று  வீட்டுக்குள் வருகிறான் அந்தப் பாணன்.
பாணி தன் கணவன் என்ன வாங்கி வந்திருப்பான் என்ற ஆவலில் அவனிடம் கேட்கிறாள்.

“வானளவு புகழ்மிக்க இந்த மண்ணில் வாழும் வள்ளலிடம் உன் திறமைகளைக் காட்டி என்ன பரிசு பெற்று வந்திருக்கிறாய்?“

“ களபம்  அளித்தார் “ என்கிறான் பாணன்.

“சந்தனமா? அது எதற்கு? பூசிக்கொள்ளவா கொடுத்தார் அந்த வள்ளல்? நாம் என்ன சந்தனம் பூசிக் கொள்ளும் நிலைமையிலா இருக்கிறோம்? அதை நீயே பூசிக்கொள்“ என்கிறாள் பாணி. களபம் என்பதற்குச் சந்தனம் என்பதும் பொருள்.

“ அய்யோ இல்லை இல்லை நீ தவறாகப் புரிந்து கொண்டாய்! அவர் கொடுத்தது மாதங்கம் “ என்கிறான் பாணன்.

“ ஓகோ நம்முடைய நிலைமையைப் புரிந்து கொண்டு நிறைய தங்கம் அளித்தானோ அவ்வள்ளல்? இனிமேல் நம் நல்வாழ்விற்குக் கவலையில்லை. நாம் நன்றாக வாழலாம் “ என்றாள் பாணி.


மேலும் படிக்க : http://oomaikkanavugal.blogspot.com/2014/09/blog-post_30.html


Tuesday, October 7, 2014

பொது மருந்து

Back in the summer of 2012, an episode of the extant television series ‘Satyameva Jayate’ posed a question to its viewers, “Does (Indian) healthcare need healing?” This was supplemented with information about the exorbitant costs of medicine and the work being done by Dr. Samit Sharma to bring those costs down. Dr. Sharma is the former President of the Rajasthan Medical Services Corporation (RMSC). He started dispensaries by the name of ‘Jan Aushadhee’ in many locations in Chittorgarh that sold generic medicines.

Inspired by his work, a group of students from BITS Pilani set out to work on creating an expansive database encompassing all types of medicines available in India. With some help from Dr. Sharma and months of rigorous data collection from NPPA (National Pharmaceutical Pricing Authority) and various other sources, they launchedTrueMD on 17th June this year. The website has a database of over 1 lakh medicines. This search engine suggests generic medicines and cheaper branded alternatives that are exactly identical to the drug being searched.


http://yourstory.com/2014/10/truemd-generic-drugs/



Monday, October 6, 2014

எஸ்எம்இகளுக்குப் பயனளிக்கும் அரசுத் திட்டங்கள்/இணையம்


October 12 2014 (நாணயம் விகடன்)

தொழில்முனைவோர் மேம்பாட்டுத் திட்டம்:

புதிதாகத் தொழில் துவங்க நினைக்கும் தொழில்முனைவோருக்கு நிதி மேலாண்மை, சந்தைப்படுத்துதல், மனிதவள பயன்பாடு தொடர்பான பயிற்சிகளை இந்தத் திட்டத்தின் மூலம் அரசு அளிக்கிறது.

தொழில் திறன் மேம்பாட்டுத் திட்டம்:

தொழில் முனைவோர்களை இரண்டு விதமாகப் பிரிக்கலாம். இந்தத் தொழிலைத்தான் நான் செய்யப் போகிறேன் என்பவர்கள் ஒருவகை. எந்தத் தொழில் செய்வது என்கிற ஐடியா எனக்கு இல்லை என்பவர்கள் இன்னொரு வகை.

தேசிய உற்பத்தி போட்டித் திட்டம்:

இந்தத் திட்டத்தின் மூலம் எஸ்எம்இ கள் சந்தைப்படுத்துதல், மேம்பாடு, இன்குபேட்டர்ஸ் தொடர்பாக ஆலோசனை பெறுவது, தங்களது புதிய கண்டுபிடிப்புகளையும், அதற்கான தரச் சான்றுகளையும் பெறுவது போன்ற வற்றுக்கான பயிற்சிகளையும், ஆலோசனைகளையும் பெறலாம். 

கிளஸ்டர் மேம்பாட்டுத் திட்டம்:

கடனுடன் இணைந்த முதலுக்கான மானிய திட்டம்:

உத்தரவாதம் இல்லாமல் ரூ.1 கோடி  வரை கடன் பெறும் சிஜிடிஎம்எஸ்இ (CGTMSE) திட்டத்தைப் பயன்படுத்தி, எஸ்எம்இகள் தங்களது தொழிலுக்குத் தேவையான நிதியைத் திரட்டலாம்.


msmedi-chennai.gov.in 
ciistartupreneurs.com 

October 19 2014 (நாணயம் விகடன்)

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மானியம் (Micro Manufacturing Enterprise Subsidy) : தமிழ்நாட்டில் எந்தப் பகுதியிலும் தொடங்கப்படும் குறுந்தொழில் உற்பத்தி நிறுவனங்களுக்கு 25% முதலீட்டு மானியம் 

பின்தங்கிய வட்டாரங்களில் அமைக்கப்படும் தொழில் மானியம் (Backward Area / Agro based subsidy) :
 www.indcom.tn.gov.in
25 நபர்களுக்குக் குறைவான அளவில் பணியமர்த்தி உள்ள நிறுவனங் களுக்குக் கூடுதலாக 5% மானியம் கிடைக்கும்.
உற்பத்தித் துவங்கிய முதல் மூன்று ஆண்டுகளுக்கு 20% மின் மானியம் பெறலாம்.
பின்தங்கிய பகுதிகளில் தொழில்கள் ஆரம்பிக்க வழங்கப்படும் நிலத்துக்கு 50 சதவிகிதமும்

மாசற்ற மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த தொழில்நுட்பத்துக்கான கூடுதல் மூலதன மானியம்

மின்னாக்கி சாதனத்துக்கு மானியம் (Generator Subsidy)

 குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு TIIC வழங்கும் கடன் - 3% வட்டி தள்ளுபடி திட்டம் (MSME Loans from TIIC – 3 % interest subvention)

நன்றி: விகடன்

https://www.numbermall.com/ -->  இணையத்தில் இணைய உதவும் செயலி
https://www.quikrupee.com/  -->   வங்கி கடன் பெற உதவும் இணையம்
http://goshopmatic.in/  --  பல இணையத்தில் விற்க உதவும் இணையம்
http://www.maaxmarket.com/  -- சந்தைப்படுத்த உதவும் இணையம்
http://www.eprs.co.in/ -- சந்தைப்படுத்த உதவும் இணையம்
https://bizom.in/ -- சந்தைப்படுத்த உதவும் இணையம்
http://www.quikchex.in/     தொழிலாளா்களை நிர்வகிக்க உதவும் இணையத்தளம்

http://www.telecomprofit.com/      வலையமைப்பு சாதனங்கள் வாங்க உதவும் இணையத்தளம்





வில்லிபாரதம் உருவான கதை

வைணவப் புலவரான வில்லிபுத்தூரார் சனியூர் என்ற ஊரில் பிறந்தவர். வக்கபாகை என்னுமிடத்தை ஆண்டுவந்த மன்னனான வரபதி ஆட்கொண்டான் என்பவன் வில்லிபுத்தூராரை ஆதரித்து வந்தான். ஒருமுறை வில்லிபுத்தூரார் புலவர்களிடம் போட்டி வைத்து யார் தோல்வி அடைகிறார்களோ அவர்களின் காதுகளை, வென்றவர் அறுக்க வேண்டும் என்று கூறினார். இப்படியாக பல பேருடைய காதுகளைப் போட்டியில் வென்று அறுத்தார் வில்லிபுத்தூரார். ஒருமுறை அவ்வூருக்கு வந்த முருக பக்தரான அருணகிரிநாதர் இந்த செயலை தடுக்க வேண்டும் என்று போட்டியில் கலந்து கொண்டார். அருணகிரியார் பாடிய ஒரு பாடலுக்கு பதில் கூற முடியாமல் வில்லிபுத்தூரார் தோற்றார். அந்த பாடலாவது ..
திதத் தத்தத் தித்தத, திதிதாதை தாததுத் தித்தத்திதா
திதத் தத்தத் தித்த திதிதித்த தேதுத்து த்திதத்தா
திதத் தத்தத் தித்தத்தை தாததி தேதுதை தாததத்து
திதத் தத்தத் தித்தித்தி தீதீ திதி துதி தீ தொத்ததே!
அதன் பொருள்:
திதத்த ததித்த: திதத்த ததித்த என்னும் தாள வாக்கியங்களை,
திதி: தன்னுடைய நடனத்தின் மூலம் நிலைபடுத்துகின்ற,
தாதை: உன்னுடைய தந்தையாகிய பரமசிவனும்,
தாத: மறை கிழவோனாகிய பிரம்மனும்,
துத்தி: புள்ளிகள் உடைய படம் விளங்கும்,
தத்தி: பாம்பாகிய ஆதிசேசனின்,
தா: முதுகாகிய இடத்தையும்,
தித: இருந்த இடத்திலேயே நிலைபெற்று,
தத்து: அலை வீசுகின்ற,
அத்தி: சமுத்திரமாகிய திருப்பாற்கடலையும் (தன்னுடைய வாசற்தலமாகக் கொண்டு),
ததி: ஆயர்பாடியில் தயிர்,
தித்தித்ததே: மிகவும் இனிப்பாக இருக்கிறதே என்று சொல்லிக்கோண்டு,
து: அதை மிகவும் வாங்கி உண்ட (திருமால்),
துதித்து: போற்றி வணங்குகின்ற,
இதத்து: போரின்ப சொரூபியாகிய,
ஆதி: மூலப்பொருளே,
தத்தத்து: தந்தங்களை உடைய,
அத்தி: யானையாகிய ஐராவதத்தால் வளர்க்கப்பட்ட,
தத்தை: கிளி போன்ற தேவயானையின்,
தாத: தாசனே,
திதே துதை: பல தீமைகள் நிறைந்ததும்,
தாது: ரத்தம் மாமிசம் முதலிய சப்த தாதுக்களால் நிரப்பப்பட்டதும்,
அதத்து உதி: மரணம் பிறப்பு இவைகளோடு கூடியதும்,
தத்து அத்து: பல ஆபத்துக்கள் நிறைந்ததும் (ஆகிய)
அத்தி தித்தி: எலும்பை மூடி இருக்கும் தோல்பை (இந்த உடம்பு),
தீ: அக்னியினால்,
தீ: தகிக்கப்படும்,
திதி: அந்த அந்திம நாளில்,
துதி தீ: உன்னை இவ்வளவு நாட்களாக துதித்து வந்த என்னுடைய புத்தி,
தொத்ததே: உன்னிடம் ஐக்கியமாகி விட வேண்டும்.
நடராச மூர்த்தியாகிய சிவபெருமானும், பிரம்மனும், இடைச்சோலையில் தயிர் உண்டு பாற்கடலையும் ஆதிசேசனையும் பாயலாகக் கொண்டு யோக நித்திரை செய்யும் திருமாலும் வணங்குகின்ற ஆனந்த மூலப் பொருளே, தேவயானையின் தாசனே, ஜனன மரணத்திற்கு இடமாய் சப்த தாதுக்கள் நிறைந்த பொல்லாத இந்த உடம்பை தீயினால் தகிக்கப்படும் பொழுது உன்னை துதித்து வந்த என் சித்தத்தை உன்னுடைய திருவடிக்கு நீ ஆட்படுத்த வேண்டும்.
என்பதே ஆகும்.
மேலும் அருணகிரியார், இனி இது போன்ற போட்டி வைக்கலாகாது எனக் கூறி, வில்லிபுத்தூராரை மன்னித்தார். வில்லிபுத்தூரார் தன் பாவத்தைத் தீர்க்க மகாபாரதத்தைத் தமிழில் எழுதினார். அதுவே வில்லிபாரதம் என்று அழைக்கபடுகிறது.
நன்றி: http://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D

வணிக உரிமம் பெறும் வழிகள்


Sunday, October 5, 2014

ஜெயமோகன்: ஆன்மீகம் என்பது மதத்துடனும், கடவுளுடனும் தொடர்புடையது அல்ல.


>>

இதே மாதிரி நித்யசைதன்ய யதியின் புத்தகத்தில் ஒரு வரி, “அழகு அனுபவம் என்பது ஒருவகையில் அறிவதின் அனுபவம் தான்…” நான் மறுத்தால் அவர் `உண்டு’ என்று சொல்வார். இப்படியே தர்க்கம் போய்க் கொண்டிருக்கும், எப்போதும் சுலபமான பதிலுக்கு உட்காரவிடாதபடி பண்ணி விடுவார், எப்போதும் தொடர்ந்து இயக்கம் இருந்து கொண்டிருக்க வேண்டும், ஒரிடத்தில் சோர்ந்து உட்கார்ந்து விடக் கூடாது என்பார். தொடர்ச்சியாக துருவித்துருவி விசாரித்து அறிகிற இந்த மரபு இந்து மரபு அல்ல, பௌத்த மரபு. எனக்கு இந்த மரபுடன் மிகவும் நெருங்க முடிகிறது. ஆன்மீகம் என்பது மதத்துடனும், கடவுளுடனும் தொடர்புடையது அல்ல. அடிப்படையான கேள்விகளின் விடையாகவே `கடவுள்’ பிறந்தார் அல்லது வெளிப்பட்டார் அடிப்படையான கேள்விகளுக்கான சில விடைகளை நம்பிக்கைகளாகவும், சடங்குகளாகவும் மாற்றும் போதே மதம் பிறந்தது. ஆகவே, ஆன்மீகமும், மதமும் பின்னிப் பிணைந்துள்ளன. ஆன்மீகத் தேடல் உள்ளவன் கடவுளையும். மதத்தையும் கூர்ந்து கவனிப்பான், இருந்தாலும் அவை வேறு வேறு என்றும் அறிந்திருப்பான். எனக்கு ஏன் இப்படி நிகழ்கிறது என்ற இடத்திலிருந்து தான் படைப்பு தொடங்குகிறது. அது விரிவடையும் போது அந்தப் படைப்பும் ஆழமுடையதாகிறது, இப்படித்தான் ஒவ்வொரு படைப்பாளியும் தனக்கென்று ஒரு பிரபஞ்சத் தரிசனத்தை உருவாக்கியிருப்பான்.

<<

பார்க்க: http://azhiyasudargal.blogspot.in/2010/10/blog-post_20.html


மகாபாரதம் – தமிழில் – நாவல் வடிவில்


10 வருடங்கள் – தினமும் இணையத்தில்

http://venmurasu.in/2014/01/01/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/

பழைய செய்தி, ஆனால் எனக்கு புது செய்தி

வங்கி கடன்/உதவித்தொகை

https://www.vidyalakshmi.co.in/Students/   வங்கி கடன் பெற உதவும் இணையம்
https://www.edudharma.com/  உதவித்தொகை பெற உதவும் இணையம்

National Scholarship Exam (NSE)

The NSE Examination is based on a Multiple Choice Questions pattern which will help Student to be more precise & careful while attempting the questions. The questions and the marking scheme are designed in such a way that a student can develop decision making ability and the reasoning power.

பார்க்க: http://www.niceedu.org/scholarship.html
நன்றி: http://scholarshipnet.info/other/india-national-institute-of-career-education-scholarship.html

SBI Asha Scholarship Programme

Aims to support students continue their education.

Eligibility: Open to Indian students who are currently enrolled from Class 6 to 12 and have scored 75% in the previous academic year. Annual family income must be less than ₹3 lakh.

Rewards: ₹15,000

Application: Online

Deadline: October 15

b4s.in/edge/SBIFS1


LIC HFL Vidyadhan Scholarship

Aims to support students from low-income families.

Eligibility: Open to Indian students currently studying in Class 11 or the first year of graduation and post- graduation programmes, and have scored more than 60% in the previous qualifying exam. Annual family income must not be more than ₹3,60,000.

Rewards: Up to ₹20,000

Application: Online

Deadline: September 30

b4s.in/edge/LHVT3

Courtesy: buddy4study.com



Saturday, October 4, 2014

திருப்பதி தேவஸ்தானம் நடத்தும அறக்கட்டளைகள்

1. ஸ்ரீவெங்கடேஸ்வரா அன்னதான அறக்கட்டளை
‘மக்களுக்குச் செய்யும் சேவையே மகேசனுக்குச் செய்யும் சேவை’ என்ற குறிக்கோளின் அடிப்படையில் எல்லோருக்கும் இலவச உணவு அளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது இந்த அறக்கட்டளை. இந்து சமயப் புராணங்களின்படி பசியுள்ளோருக்கு உணவளித்தல் என்பது புனிதச் சடங்குகள் செய்வதற்கு ஒப்பானது. 1964ல் துவக்கப்பட்ட இந்த அறக்கட்டளை இன்று நாளொன்றுக்கு சுமார் 60,000 பேருக்கு அன்னதானம் செய்து வருகிறது.
2. ஊனமுற்றோருக்கான அறுவைச் சிகிச்சை, ஆய்வு மற்றும் மறுவாழ்வு அறக்கட்டளை
இந்த மருத்துவ அமைப்பு, இளம்பிள்ளைவாத நோய், மூளைவளர்ச்சி குன்றிய தன்மை, பிறவி ஊனங்கள், முதுகுத்தண்டு பாதிப்பு, மற்றும் பிற பிரச்சனைகள் தொடர்பானவற்றிற்கு இலவசச் சிகிச்சை அளித்து வருகிறது.
3. ஸ்ரீவேங்கடேஸ்வரா பாரம்பரியப் பாதுகாப்பு அறக் கட்டளை
இந்த அறக்கட்டளை, கோவில்களைப் பாதுகாத்தல், பராமரித்தல் மற்றும் புனர்நிர்மாணம் செய்தல் ஆகியவற்றில் ஈடுபட்டு வருகிறது.
4. ஸ்ரீ வெங்கடேஸ்வரா வேத பாடசாலை அறக்கட்டளை
2007- ல் துவக்கப்பட்ட இந்த அறக்கட்டளை வேதக் கல்வி, வேத அறிவு மற்றும் வேதக் கலாச்சாரம் ஆகியவற்றின் வளர்ச்சிக் காகப் பாடுபட்டு வருகிறது.
5. ஸ்ரீ வெங்கடேஸ்வரா வித்யா தான அறக்கட்டளை
வறுமைக் கோட்டிற்குக் கீழே இருக்கின்ற, கல்வியில் சிறந்த மாணவர்கள், ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் உயர்கல்வி கற்பதற்கு உதவித் தொகை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது இந்த அறக்கட்டளை.
6. பத்மாவதி தாயார் நித்ய அன்னப்பிரசாத அறக்கட்டளை
திருச்சானூரில் இருக்கும் பத்மாவதி தாயாரின் கோவிலுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு இந்த அறக்கட்டளை இலவசமாக உணவு வழங்கி வருகிறது.
7. ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோசம்ரக்ஷண அறக்கட்டளை
புனிதமான பசுவைப் பாதுகாக்கும் மேன்மையான நோக்கத்துடன் இந்த அறக்கட்டளை துவக்கப்பட்டது. திருப்பதியிலுள்ள கோசாலைக்கு வெளியே இருக்கும் பசுக்களின் மேம்பாட்டுக்கான தொழில்நுட்பத் தகவல்களை இந்த அறக்கட்டளை பொதுமக்களுடனும் மாட்டுப் பண்ணை வைத்திருப்பவர்களுடனும் பகிர்ந்து கொள்கிறது.
8. ஸ்ரீ வெங்கடேஸ்வரா பிராணதான அறக்கட்டளை
சாதி மதப் பாகுபாடின்றி, புற்றுநோய், இதயநோய், மூளை பாதிப்பு, சீறுநீரக பாதிப்பு ஆகியவற்றால் அல்லலுறும் ஏழை எளிய மக்களுக்கு இந்த அறக்கட்டளை இலவசச் சிகிச்சை அளித்து வருகிறது.

பழந்தமிழ் இலக்கியச் சொல் அடைவு



நன்றி: http://www.dinamalar.com/supplementary_detail.asp?id=21056&ncat=4



தமிழில் இந்த அரிய முயற்சியினை, மதுரையைச் சேர்ந்த பேராசிரியர் பாண்டியராஜா மேற்கொண்டு தந்துள்ளார். இவரின் சொல்லடைவுகள்http://sangamconcordance.in/ என்ற முகவரியில் உள்ள இணைய தளத்தில் பதியப்பட்டு அனைவருக்கும் இலவசமாகக் கிடைக்கிறது.


இறைவன் மனத்தில் இருக்கிறார்




திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில், தர்ம தரிசன வரிசையில் பல மணி நேரமாக காத்திருப்போரில் சிலர், வி.ஐ.பி., ஒருவர் அதிகாரிகள் புடைசூழ மரியாதையுடன் அழைத்து செல்லப்பட்டு, வெங்கடாஜலபதி முன் அமர்ந்து, சுவாமி தரிசனம் செய்யும் காட்சியைப் பார்த்தால், மனதுக்குள் புழுங்கி, 'ஏழுமலையானே... எங்களையும் இந்த நிலைக்கு உயர்த்த மாட்டாயா...' என்று ஏக்கம் கொள்வர்.

ஆனால், ஏழுமலையான் மேல் உண்மையான பக்தி இருந்தால், அந்த ஏக்கம் தேவையில்லை; அவனே தேடி வந்து அருள்வான் என்பதை விளக்கும் கதை இது.
பீமன் எனும் மண்பாண்டத் தொழிலாளி ஒருவர், புரட்டாசி சனி என்றில்லாமல், எல்லா சனிக்கிழமைகளும் பெருமாளை நினைத்து, விரதம் இருந்து வந்தார். அவர் ஒரு ஏழைத் தொழிலாளி என்பதால், நாள் முழுக்க வேலை செய்ய வேண்டிய கட்டாயம். இதனால், அவரால், திருப்பதிக்கு போக முடியவில்லை. அதனால், வெங்கடா ஜலபதியின் சிலையை மண்ணிலேயே வடித்து, தன் வீட்டில் வைத்து வழிபட்டு வந்தார். தினமும், மண்பாண்டங்கள் செய்து முடித்ததும், கையில் ஒட்டியிருக்கும் மண்ணை வழித்து, சிறு சிறு பூப்போல செய்து, அதை அந்த சிலைக்கு தூவுவார்.
இந்த சமயத்தில், மன்னன் தொண்டைமான், ஏழுமலையானுக்கு தங்கப்பூக்களை காணிக்கையாக வழங்கி, தினமும், அந்தப் பூக்களால் தான் பெருமாளை அர்ச்சனை செய்ய வேண்டும் என, உத்தரவிட்டான். அதே போன்று, அர்ச்சகர்களும் தங்கப் பூக்களால் அர்ச்சனையை செய்தனர். ஆனால், மறுநாள் வேங்கடவனின் பாதத்தில் கிடந்ததோ மண்ணால் செய்யப்பட்ட பூக்கள். இது தினமும் தொடர்ந்ததால், இந்த விஷயத்தை அர்ச்சகர்கள், மன்னரிடம் தெரியப்படுத்தினர். இதைக் கேட்டதும் மன்னன் ஆச்சரியப்பட்டாலும், மனதில் குழப்பம் அடைந்தான்.
மன்னனின் கனவில் தோன்றிய ஏழுமலையான், 'மன்னா... மனம் குழம்பாதே... என் பக்தன் பீமன் என்பவன் மண் பூக்களால் என்னை பக்தியுடன் அர்ச்சிக்கும் பூக்களை நான் ஏற்றுக் கொண்டதற்கு அடையாளமாகத் தான் அப்பூக்கள் அங்கே தென்படுகின்றன...' என்றார்.
தன் எளிமையான பக்தியின் மூலம் கடவுளின் அருளைப் பெற்ற பீமனைத் தேடிச் சென்ற மன்னன், அவரிடம் நடந்ததைக் கூறினார். அவரோ, 'அரசே... காலை முதல் மாலை வரை இந்த வண்டிச்சக்கரம் சுழன்றால் தான், என் வாழ்க்கைச் சக்கரம் சுழலும்; இதில், எனக்கு கோவிலுக்குப் போக நேரமேது! அதனால், மண்ணில் செய்த இந்த மண் பூக்களால், வேங்கடவனுக்கு அர்ச்சனை செய்வேன். சனிக்கிழமை விரதத்தை தவறாமல் அனுஷ்டிப்பேன். ஆனால், இதற்காக, என் பூக்கள் பெருமாளின் காலடியில் வந்து விழுகிறது என்றால், அவனது கருணையை என்னவென்பேன்...' என்று நெகிழ்ந்தார்.
பீமனின் வார்த்தையைக் கேட்ட மன்னன், அன்றிலிருந்து, திருப்பதி கோவிலில், சனிக்கிழமை சிறப்பு பூஜைக்கு ஏற்பாடு செய்ததுடன், புரட்டாசி பிரம்மோற்சவமும் நடத்த ஆணையிட்டான். அன்று முதல், இன்று வரை திருப்பதி திருமலையில் இந்த விழாக்கள் முக்கியமானவையாக உள்ளன.

திருப்பதி செல்பவர்கள், கை நிறைய காசு கொண்டு செல்ல வேண்டுமென்பதில்லை. உள்ளம் நிறைய பக்தியை சுமந்து சென்றால் போதும்; வேங்கடவனின் அருளைப் பெறலாம்.




நன்றி: http://www.dinamalar.com/supplementary_detail.asp?id=21895&ncat=2