Tuesday, September 30, 2014

கவிதை: இராமனா ? இராவணனா ?


கருவுற்றிருந்த தாய் மகளிடம் கேட்டாள்

“கூறு மகளே!தம்பி வேண்டுமா,தங்கை வேண்டுமா?”

மகள் சொன்னாள் “தம்பியே வேண்டும்”

அம்மா வினவினாள் ”யாரைப் போல்?”

தயக்கமின்றிச் சொன்னாள் பெண்

“இராவணன் போல்” என்று

அதிர்ந்து போனாள் அன்னை

“என்ன உளறுகிறாய்,இராமன் என்பதற்கு

இராவணன் என்றாயோ?”

சிரித்தாள் மகள்.

”தங்கையின் அவமானம் தீர்க்க

தன் அரசையும் ஆயுளையும்

இழக்கத் துணிந்தவன்.

அன்னியன் மனைவியைக் கவர்ந்தாலும்

கை விரல் கூட வைக்காதவன்.

ஆனால் என்ன செய்தான் ராமன்

அக்னிப் பிரவேசம் செய்யச் சொன்னான்

அன்பு மனைவி தன்னை.

எவனோ பழி சொல்லக்கேட்டு

கருவுற்ற மனைவியைக் காட்டுக்கு அனுப்பினான்

அம்மா!நீயும் ஒரு சகோதரி,ஒரு மனைவி

நீயே சொல்!இராவணன் போல் தம்பி வேண்டுவதில்

தவறெதேனும் உண்டோ?”


(கருத்து இணையத்திலிருந்து.கால மாற்றம் ;இளைஞர்களின் கருத்து மாற்றம்.பார்வை மாற்றம்,புரிதல் மாற்றம்!!)


 நன்றி: http://chennaipithan.blogspot.com/

வீடில்லாத புத்தகங்கள்


சென்னையில் திருவல்லிக்கேணி, மாம்பலம், அசோக்பில்லர், அண்ணா சாலை, சென்ட்ரல், அடையாறு, எக்மோர், மயிலாப்பூர் எனப் பழைய புத்தகக் கடைகள் இருக்கின்றன. திருச்சியில் மலைக்கோட்டை அருகில், மதுரையில் ரீகல் தியேட்டர் முன்பு, நேதாஜி சாலையில் நியூ சினிமா தியேட்டர் பக்கம் உள்ள சந்தில் பழைய புத்தகக் கடைகள் உண்டு.

ஓல்டு டெல்லியில் தரியாகஞ்ச் பகுதியில் ஞாயிற்றுக்கிழமைகளில் போடப்படும் கிதாப் பஜார்.

திருநெல்வேலி பாளையங்கோட்டையில், பழநி பேருந்து நிலைய வாசலில், கோவை ராஜவீதியில், சேலம் ரயில் நிலையம் எதிரில், பெங்களுர் எம்ஜி ரோடு பிரிகேட் ரோடு, மற்றும் மைசூர் பேங்க் சர்க்கிள், காரைக்குடி மலர் லாட்ஜ் எதிரில் என ஒவ்வோர் ஊரிலும் சிறந்த நடைபாதை புத்தகக் கடைகள் இருக்கவே செய்கின்றன.

நன்றி;
http://tamil.thehindu.com/general/literature/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-1-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D/article6421560.ece?homepage=true


இணையம்: தமிழ் அகராதி

http://dsal.uchicago.edu/dictionaries/list.html#tamil


Monday, September 29, 2014

இலவசம்: ஆயிரக்கணக்கான நூல்கள்


http://alaiyallasunami.blogspot.com/2012/04/tet.html

http://www.kalvisolai.com/

http://www.tnguru.com/

http://www.4tamilmedia.com/all/tips/5592-2012-05-25-00-52-14


நன்றி: http://valarumkavithai.blogspot.ie/2014/09/blog-post_21.html


ஒரே பொருள், வாக்கியம் பல

சங்க இலக்கியம் : “தீதும் நன்றும் பிறர் தர வாரா” என்று கூறும்,

திருக்குறள்: பிறர்க்கின்னா முற்பகல் செய்யின்..” என்று கூறும்,

சிலப்பதிகாரம்: “அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்”  என்று சொல்லும்.

அறிவியல் (நியூட்டனின் மூன்றாம் விதி) : “ஒவ்வொரு செயலுக்கும் சமமான எதிர்விளைவு உண்டு“ எனும்

கிராமத்து்க் கிழவி: “உப்பத் தின்னவன் தண்ணி குடிச்சாகணும்“ என்பாள்


நன்றி: http://valarumkavithai.blogspot.com/2014/09/blog-post_27.html

கவிதை


“என்ன செய்து கிழித்து விட்டார் பெரியார்?”
பனை ஏறும்
தந்தை தொழிலில்
இருந்து தப்பித்து
தலைமைச் செயலகத்தில்
வேலை செய்பவர் கேட்டார்!“பெரியாரின்
முரட்டுத்தனமான அணுகுமுறை
அதெல்லாம் சரிபட்டு வராதுங்க”
இதுமுடி வெட்டும்
தோழரின் மகனான
எலக்ட்ரிக்கல் என்ஜினியர்!

“என்னங்க
பெரியார் சொல்லிட்டா சரியா?
திராவிட இயக்கம்
இலக்கியத்துல என்ன செஞ்சி கிழிச்சது?
இப்படி ‘இந்தியா டுடே’
பாணியில்கேட்டவர்
அப்பன் இன்னும்
பிணம் எரித்துக் கொண்டிருக்க
இங்கே டெலிபோன் டிபார்மென்டில்
சுபமங்களாவை விரித்தபடி
சுஜாதா
சுந்தர ராமசாமிக்கு
இணையாக
இலக்கிய சர்ச்சைசெய்து கொண்டிருக்கும்
அவருடைய மகன்.

ஆமாம்
அப்படி என்னதான் செய்தார் பெரியார்?

-வே. மதிமாறன்


நன்றி: http://www.malartharu.org/2014/09/e-v-r-periyar.html

Sunday, September 28, 2014

படித்ததில் பிடித்தது

 'தாயிற் சிறந்ததொரு கோயிலும் இல்லை, தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை’ - என்று சொன்னது ஒளவையாரா... நாலடியாரா?
ஒளவையார்தான்! புகழ்பெற்ற பல்வேறு அறக் கருத்துகளை ஒளவையார் சொல்லிச் சென்றுள்ளார். புழக்கத்தில் இருக்கும் அவை ஒளவை சொன்னதுதான் என்பது தெரியாமல் பயன்படுத்திக்கொண்டு இருக்கிறோம். அப்படிப்பட்ட சில இவை:
திரைகடல் ஓடியும் திரவியம் தேடு.
குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை.
மூத்தோர் சொல்வார்த்தை அமிர்தம்.
முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்.
கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே.
உடன்பிறந்தே கொல்லும் வியாதி.
ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும் மாண்டார் வருவாரோ?
- இப்படி ஒளவை மொழி ஆயிரம் உண்டு!

Wednesday, September 24, 2014

மருத்துவம்: உப்பு

உணவு வகைகளில், 'டேஸ்ட்' சரியாக இல்லை என்றால், கொஞ்சம் உப்பைக் கொட்டி கலந்து விட்டு, 'இப்ப நல்ல டேஸ்டா இருக்கே...' என, சப்புக் கொட்டி சாப்பிடுவோர், நம்மில் ஏராளம். ஆனால், ஒரு நாளுக்கு, 5 கிராம் உப்பே பயன்படுத்த வேண்டும் என்பது யாருக்காவது தெரியுமா?
என்ன, ஆச்சர்யமாக இருக்கிறதா? அதுவே உண்மை!
உலக சுகாதார நிறுவனம், இப்படித் தான், ஒரு நபருக்கான உப்பின் பயன்பாட்டை அளவிட்டுள்ளது. அதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல், 'இருக்கிற வரைக்கும் நல்லா சாப்பிட்டு அனுபவிச்சுட்டு போகணும் பா...' என, வீண் ஜம்பம் பேசுவதே, பல நோய்களுக்கும் காரணமாகி விடுகிறது என்கின்றனர், டாக்டர்கள்.


http://www.dinamalar.com/supplementary_detail.asp?id=22031&ncat=11

கை வைத்தியம்

* சீதபேதி கடுமையாக இருந்தால், ஊற வைத்த வெந்தயத்தை அரைத்து, தயிரில் கலந்து மூன்று வேளை கொடுக்க குணமாகும்.
* அடிக்கடி ஏப்பம் வந்தால், வேப்பம்பூவை தூள் செய்து, நான்கு சிட்டிகை எடுத்து, இஞ்சி சாறுடன் கலந்து உட்கொண்டால் குணமாகும்.


நல்ல கொழுப்பு அதிகரிக்க...
இரவு, இரண்டு பாதாம்களை ஊறவைத்து, காலையில் சாப்பிட்டுவந்தால், நல்ல கொழுப்பு உடலில் அதிகரித்து, இதய நோய் வராமல் காக்கும்.
சளித் தொலைக்கு...
ஒரு கிளாஸ் இளஞ்சூடான பாலுடன், ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள், ஒரு ஸ்பூன் மிளகுத் தூள் கலந்து பனங்கற்கண்டு சேர்த்து குடிக்கலாம். அரை லிட்டர் நீரில், நறுக்கிய அரை கப் வெண்டைக்காயைப் போட்டு, பாத்திரத்தை மூடிக் கொதிக்கவிடவும். ஒருநாளைக்கு இருமுறை ஆவி பிடிக்க, சளி குறையும்.

சளி, தொண்டைக் கரகரப்பு, இருமல் பிரச்னைகளுக்கு, மிளகை அரை லிட்டர் தண்ணீரில் கொதிக்கவிட்டு சிறிது சிறிதாக இடைவெளி விட்டு குடிக்கலாம்.
தொடர் தும்மல் பிரச்னைக்கு, ஒரு டம்ளர் நீரில் அரை எலுமிச்சம் பழச்சாறு கலந்து, வெறும் வயிற்றில் குடிக்கலாம்

http://www.dinamalar.com/supplementary_detail.asp?id=22030&ncat=11

http://www.vikatan.com/new/article.php?module=magazine&aid=102247

எளிய வைத்தியம்
ரத்தச் சோகைக்கு (Anaemia):
1/2 தேக்கரண்டி வல்லாரை இலைச்சாற்றுடன் 1 தேக்கரண்டி தேன் கலந்து 1 மாதம் அருந்தவும்.
மன அமைதிக்கு:
வல்லாரை இலைகளைக் காயவைத்துப் பொடித்து வைத்துக்கொள்ளவும். தினமும் 1/4 தேக்கரண்டி சூரணத்தைத் தேன் அல்லது பசும்பாலோடு சேர்த்து உட்கொள்ளவும்.
தூக்கமின்மை:
1/2 தேக்கரண்டி வல்லாரை பொடியை 1 க தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி, இரவில் படுக்கும் முன் குடிக்கவும்.
ஞாபகமறதி:
5 வல்லாரை இலைகளை இடித்துச் சாறெடுத்து, ஒரு தேக்கரண்டி தேனோடு சேர்த்துத் தினமும் உண்ணவும்.

தேமலை விரட்டுங்க! நாட்டுமருந்துக் கடைகளில் கார்போக அரிசி என்று கேட்டால் தருவார்கள். இதைப் பொடி செய்து, மெல்லிய துணியில் சலித்து, ஒரு டப்பாவில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். தினமும் இதில் கொஞ்சம் எடுத்துத் தண்ணீர் விட்டு பேஸ்ட் மாதிரி செய்து தோலில் தடவுங்கள். விரைவில் தேமல் இருந்த இடம் தெரியாமல் போகும்! 

Monday, September 22, 2014

தமிழர் கால அறிவியல்

தமிழர்கள் காலத்தினைப் பெரும்பொழுதுசிறுபொழுது என்று இருவகையாகப் பகுத்தனர். “பெரும்பொழுது“ என்பதுஓர் ஆண்டின் ஆறு கூறுகள்

கார் (மழை) – ஆவணியும் புரட்டாசியும்
கூதிர் (குளிர்) – ஐப்பசியும் கார்த்திகையும்
முன்பனி – மார்கழியும் தையும்
பின்பனி – மாசியும் பங்குனியும்
இளவேனில் – சித்திரையும் வைகாசியும்
முதுவேனில் – ஆணியும் ஆடியும் என்பனவாகும்.

சிறுபொழுது“ என்பது ஒரு நாளின் 24 மணி நேரத்தை ஆறு கூறுகளாக்குவது
அதாவது ஒரு சிறுபொழுது என்பது நான்கு மணிநேரத்தை உள்ளடக்கியது

நள்ளிரவு மணிமுதல் காலை 6மணிவரை “வைகறை“காலை மணிமுதல் 10 மணிவரை “காலை“(விடியல்), 
முற்பகல் 10 மணிமுதல் பிற்பகல் மணிவரை “நண்பகல்“,
பிற்பகல் மணிமுதல் மாலை மணிவரை “எற்பாடு“
மாலை 6மணிமுதல் இரவு 10 மணிவரை “மாலை“
இரவு 10 மணிமுதல் நள்ளிரவு 2மணிவரை “யாமம்“ என்பனவாகும்.

தமிழர்கள் சிறுபொழுதுகளை மணிக்கணக்கில் பிரிக்காமல் நாழிகைக் கணக்கில் பிரித்தனர்.

நாழிகை“ என்பதுபழங்காலக் காலக்கணக்கீட்டின் ஓர் அலகு.  
24நிமிடங்கள் ஒரு நாழிகை

இந்த நாழிகையைக் கணக்கிட ஒரு கருவியினைக் கண்டறிந்தனர்.வட்டில் ஒன்றில் நீர் நிரப்பிஒரு சிறு துளை வழியே அந்நீரைச் சிறிது சிறிதாகக் கசியவிட்டுஎஞ்சிய நீரை அளந்து பொழுதினைக் கண்டறியும் விதத்தில் ஒரு கருவியினை உருவாக்கினர்அதனைக் கொண்டு பகலிலும் இரவிலும் துல்லியமாகக் காலத்தைக் கண்டறிய முடிந்ததுஇக்கருவிக்குக் “குறுநீர்க்கன்னல்“ அல்லது “நாழிகை வட்டில்“ என்று பெயரிட்டனர்.இக்கருவி பற்றிய செய்தி மணிமேகலையிலும் இக்கருவியினைக் கொண்டு காலத்தினைக் கணக்கிட்ட நாழிகைக் கணக்கர் பற்றிய குறிப்பு சிலப்பதிகாரத்திலும் இடம்பெற்றுள்ளன.

மேலும் படிக்க: http://www.tamilpaper.net/?p=9003

திருமண சான்றிதழ் பெறும் நடைமுறைகள்


300 வார்த்தைகளில் மொழியை கற்கலாம்

Refer: http://www.fluentin3months.com/most-common-300-words/


Those 300 words — we’re talking about the 300 most frequently-used words, by the way —represent about 65% of all the words you’ll use on a regular basis. By contrast, 2000 words represents about 90%. The difference between those two is staggering.


Wednesday, September 17, 2014

மூக்குத்தி

‘வாழ்தல் உயிர்கன்னள் ஆயிழை சாதல் 
அதற்கன்னள் நீங்கும் இடத்து.’ 
- ஆராய்ந்தறிந்த நல்ல அணிகலன்களை அணிந்த இப்பெண்ணோடு சேர்ந்திருத்தல், உயிர், உடலோடு சேர்ந்து இருக்கும் வாழ்வு போன்றது. இவளைப் பிரிந்து வாழ்தல், உயிர் உடலிலிருந்து நீங்கிச் சாதலைப் போல் துன்பம் தருவதாம். 

http://www.dinamalar.com/supplementary_detail.asp?id=21827&ncat=10&Print=1

சௌராஷ்டிரர்களின் இலக்கியக்கொடை

http://ilakkanatheral.blogspot.ie/2014/09/blog-post.html

Thursday, September 11, 2014

எலிகள் விரட்டும் இயற்கை யுத்தி

புதர்கள்ல,  வேலிகள்ல கிரிக்கெட் பந்து அளவுல பச்சை நிறத்துல வெள்ளை வரிகள் ஓடுற காய்கள் காய்ச்சுக் கிடக்கும். இதுக்குப் பேரு வரி ஊமத்தங்காய். இது ரொம்ப கசப்புத்தன்மை கொண்டது. இந்தக் காய்களைப் பறிச்சு ரெண்டா வெட்டி... அதுக்குள்ள எலிக்குப் பிடிச்ச தின்பண்டத்தை வெச்சுட்டா ஆர்வமுடன் வர்ற எலிகள் அதை சாப்பிடும். அந்த கசப்புத்தன்மையைத் தாங்க முடியாம ஒரு நாள் முழுசும் எலிகள் அலையும். அப்பறம் அந்த ஏரியா பக்கமே எலிகள் வராது

பாய் பற்றிய தகவல்

'பாய் போட்டு படுத்தா... நோய் விட்டு போகும்’ங்குறது உண்மை. இதுமாதிரியான விஷயங்களை தாடி வெச்ச சாமியாருங்க யாராச்சும் சொன்னா, கையைக் கட்டிக்கிட்டு வரிசையில நின்னு ஆயிரக்கணக்குல தட்சணை கொடுத்துட்டு வர்றவங்க நிறையபேரு. ஆனா, நம்ம முன்னோருங்க சூழ்நிலைக்கு தக்கப்படி விதம்விதமான பாய்களைப் பயன்படுத்தியிருக்குற விஷயத்தை மறந்துட்டோம். நாள் முழுக்க கம்ப்யூட்டர் முன்ன உட்கார்ந்து வேலை செய்யறவங்களோட உடம்பு, அனல் மாதிரி கொதிக்கும். கவனச்சிதறல் உண்டாகும். வேலை செய்யறதுல சலிப்பும் வரும். இந்த அனல் உடம்புக்காரங்க கோரைப் பாயில படுத்தா... உடல் சூடு குறைஞ்சு குளிர்ச்சி உண்டாகும்.  'என்னமோ, போங்க’னு சோம்பலா சொல்லிக்கிட்டிருக்கிறவங்க, ஈச்சம் பாயில படுத்தா சுறுசுறுப்பாயிடுவாங்க. அதேசமயம், ஈச்சம் பாயில தொடர்ந்து படுத்தா, உடம்பு சூடு அதிகமாயிடும்ங்கிறதை மறக்க வேணாம். தாழம் பாயில படுக்கும்போது, தலைவலி, பித்தம் நீங்கும். எந்த வகையான பாயில படுத்தாலும், உங்களுக்கு முதுகு வலி வராது. முதுகுவலியில அவதிப்படுறவங்கள பார்த்தா, 'முதல்ல தரையில பாய் போட்டு படுங்க, வலி விட்டு போகும்’னுதான் மருத்துவர்களும் பரிந்துரை செய்யறாங்க.

Tuesday, September 9, 2014

கடுக்காய்

"காலை இஞ்சி கடும்பகல் சுக்கு
மாலை கடுக்காய் மண்டலம் உண்டால்
விருத்தனும் பாலனாமே.-
காலை வெறும் வயிற்றில் இஞ்சி- நண்பகலில் சுக்கு- இரவில் கடுக்காய் என தொடர்ந்து ஒரு மண்டலம் (48 நாட்கள்) சாப்பிட்டுவர, கிழவனும் குமரனாகலாம் என்பதே இந்தப் பாடலின் கருத்தாம். 


மேலும் படிக்க: http://www.nakkheeran.in/users/frmArticles.aspx?A=3277

சூப் நல்லதா... கெட்டதா?

'ஆரோக்கியம் என்று நினைத்து குடித்துக்கொண்டிருக்கும் இந்த சூப் வகைகளில், உண்மை யாகவே ஆரோக்கியம் கிடைக்கிறதா என்று யாரும் சிந்திப்பதில்லை. குறிப்பாக,  பெரும்பாலான கடைகளில் விற்கப்படும் சூப்களில் சுவைக்காக சேர்க்கப்படும் பொருட் கள், ஆரோக்கியத்தைவிட, எதிர் விளைவுகளையே அதிகம் தருவதாக இருக்கின்றன'' என்று அதிர்ச்சியூட்டுகிறார், சென்னையைச் சேர்ந்த 'டயட்டீஷியன்' கிருஷ்ணமூர்த்தி.நன்றி : http://www.vikatan.com/new/article.php?module=magazine&aid=98618

Wednesday, September 3, 2014

30 வகை கொழுக்கட்டை


 1. பீட்ரூட் அம்மணி கொழுக்கட்டை
 2. சத்துமாவு கொழுக்கட்டை
 3. கறுப்பு உளுந்து மசாலா கொழுக்கட்டை
 4. எள்ளு கொள்ளு கொழுக்கட்டை
 5. மோதகம்
 6. துளசி கொழுக்கட்டை
 7. கற்பூரவல்லி கொழுக்கட்டை ரோல்
 8. மிக்ஸ்டு ஃப்ரூட் கொழுக்கட்டை
 9. சோள ரவை கேசரி கொழுக்கட்டை
 10. சம்பா ரவை பிடிகொழுக்கட்டை
 11. சோளமுத்து கொழுக்கட்டை
 12. வேர்க்கடலை காரக்கொழுக்கட்டை
 13. கம்பு நெல்லிக்காய் கொழுக்கட்டை
 14. புரோட்டீன் விட்டமின் கொழுக்கட்டை
 15. பல்லு கொழுக்கட்டை
 16. கேரட் அல்வா கொழுக்கட்டை
 17. செவ்வாய் பிள்ளையார் கொழுக்கட்டை
 18. சர்க்கரைவள்ளிக் கிழங்கு கொழுக்கட்டை
 19. மிட்டாய் கொழுக்கட்டை
 20. திடீர் இடியாப்ப கொழுக்கட்டை
 21. கொழுக்கட்டை பாயசம்
 22. பனீர் ராகி கொழுக்கட்டை
 23. கடலைப்பருப்பு கொழுக்கட்டை
 24. சிவப்பு அவல் கொழுக்கட்டை
 25. பொரித்த மோதகம்
 26. உப்புமா கொழுக்கட்டை
 27. பாஸ்தா மினி கொழுக்கட்டை
 28. மிக்ஸ்டு வெஜ் உசிலி கொழுக்கட்டை
 29. இலை கொழுக்கட்டை
 30. ஜவ்வரிசி கொழுக்கட்டைநன்றி: விகடன்
http://www.vikatan.com/new/article.php?module=magazine&aid=98200

உணவே மருந்து-2 (விகடன்)


உணவே மருந்து-1


இடம் அனுமதி பெறும் வழிமுறைகள்


Tuesday, September 2, 2014

படித்ததில் பிடித்தது

யாராக இருந்தாலும் ஓர் உண்மையைப் புரிந்துகொள்ள வேண்டும். இரண்டு வயது வரைதான் குழந்தையைத் தூக்கி விளையாட முடியும். ஐந்து வயது வரைதான் கிச்சுகிச்சு மூட்டி விளையாட முடியும். பத்து வயதுவரைதான் ஓடிப்பிடித்து விளையாட முடியும். பதினைந்து வரைதான் பேட்மின்டன், ஷட்டில்காக் விளையாட முடியும். இதெல்லாம் கோடி ரூபாய் கொடுத்தாலும் கிடைக்காத இன்பங்கள்! உணர்ந்துகொண்டாலே போதும், ஒவ்வொன்றும் தானாகவே சரியாகிவிடும்.“தன்பெண்டு தன்பிள்ளை சோறு வீடு, சம்பாத்தியம் இவையுண்டு தானுண்டு என்பொன், சின்னதொரு கடுகுபோல் உள்ளங்கொண்டோன், தெருவார்க்கும் பயனற்ற சிறிய வீணன்“  : பாரதிதாசன்