Tuesday, August 26, 2014

கலையா, அறிவியலா எது முக்கியம்?

கலையா, அறிவியலா எது முக்கியம்?
'ஸய்ன்ஸ் இல்லாவிட்டால் அசட்டுத்தனம் மலியும். இலக்கியம் இல்லாவிட்டால், நாம் உணர்ச்சியற்ற யந்திரங்களாகிவிடுவோம்’ என்று புதுமைப்பித்தன் 1934-ல் எழுதியிருக்கிறார்.
''ஒரு ஸி.வி.ராமன், ஒரு ஜகதீச சந்திர போசு, ஒரு மார்க்கனி, ஒரு எடிஸன், ஒரு கார்ல் மார்க்ஸ், ஒரு கீத் பிறக்காவிட்டால், நாகரிக வளர்ச்சிக்கு சாதனம் இருக்காது. ஒரு பாரதி, ஒரு கம்பன், ஒரு தாகூர், ஒரு வால்ட் விட்மன் பிறக்காவிட்டால், வாழ்க்கையில் ஒரு பிடிப்பு ஏற்படாது. வாழ்க்கை ரஸிக்காது. வெறும் வெட்ட வெளியாய், காரண காரியங்களில் பிணிக்கப்பட்ட ஒரு இதயமற்ற கட்டுக்கோப்பாக இருக்கும்.
கலை - உணர்ச்சி நூல், அறிவியல் - அறிவு நூல். இரண்டுக்கும் ஒரு வித்தியாசம். ஒருவன், அறிவைக் கொண்டு துருவித் துருவி பிரித்துப் பிரித்து உலகத்தைக் கவனிக்கிறான். இன்னொருவன், சிருஷ்டியின் உண்மைகளை அப்படியே முழுக் கனவாகப் பார்த்துக் கணிக்கிறான். இரண்டும் அவசியம்தான். இரண்டும் எதிர்க்கட்சி போடவில்லை. இரண்டும் ஒன்றை ஒன்று முற்றுப்படுத்துகிறது. தெய்வத்தை படைப்பது கவிஞன். தெய்வத்தை அறிபவன் ஸயன்டிஸ்ட்'' என்கிறார் புதுமைப்பித்தன்.
நன்றி: விகடன்

No comments: