Sunday, August 31, 2014

தாய்ப்பால்

பெற்ற குழந்தைக்கு உற்ற மருந்தென்று தாய்ப்பால் மிஞ்சிடத் தரணியில் ஏதும் உண்டோ? தாய்க்கும் சிசுவுக்குமான தன்னிகரில்லா உறவுப் பிணைப்பான தாய்ப்பாலின் சிறப்புகளையும், மருத்துவப் பலன்களையும் விரிவாகப் பேசுகிறார், மகளிர் நலம் மற்றும் மகப்பேறு மருத்துவர் பொன்னி.

சீம்பால் (Colostrum)
மஞ்சள் கலந்த ஆரஞ்சு நிறத்தில், பிசுபிசுப்பாகச் சுரக்கும் சீம்பால்தான் குழந்தையின் முதல் உணவு. குழந்தை விரும்பிக் குடிக்கும் அளவுக்கு சீம்பால் தித்திப்பாக இருக்கும். சீம்பாலில் ஐ.ஜி.ஏ (Immunoglobulin A) என்ற 'நோய் எதிர்ப்பொருள்’ (Antibodies) உள்ளது. இது குழந்தைக்கு எந்தவிதமான நோய்த்தொற்றும் ஏற்படாமல் காப்பதுடன், நோய் எதிர்ப்பு ஆற்றலையும் அதிகரிக்கச் செய்யும். சீம்பாலில் ரத்த வெள்ளை அணுக்களின் அடர்த்தி அதிகமாக இருப்பதால், குழந்தைகளுக்கு ரத்தப் புற்றுநோய் வராமல் தடுக்கும்.

http://www.vikatan.com/new/article.php?module=magazine&aid=97349

புற்றுநோய்க்கு மருந்தாகும் மசாலா பொருட்கள்

''உணவே மருந்து’ என்பது, அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்ட உலக உண்மை. நம் பாரம்பரிய இந்திய மசாலா பொருட்களான மஞ்சள், குங்குமப்பூ, இஞ்சி, பூண்டு, சீரகம், லவங்கம் போன்றவை உடலில் நோய் எதிர்ப்பு சக்தியைத் தந்து, புற்றுநோயைத் தடுத்து, குணப்படுத்தக்கூடிய ஆற்றல்கொண்டவை' என்று பெருமிதத்துடன் சொல்லும் ஆயுர்வேத மருத்துவர் எல். மஹாதேவன், புற்றுநோயைத் தடுக்கும்  பொருட்களைப் பட்டியலிட்டார்.

http://www.vikatan.com/new/article.php?module=magazine&aid=97352

NIEPMD: நிப்மெட் (ஊனமுற்றோரின் மேம்பாட்டுக்கான தேசிய நிறுவனம்’ (National Institute for Empowerment of Persons with Multiple Disabilities))

சென்னை, கிழக்குக் கடற்கரைச் சாலை, முட்டுக்காட்டில் சுமார் 15 ஏக்கர் பரப்பளவில், பரந்து விரிந்திருக்கிறது அந்த மத்திய அரசு நிறுவனம். 'நிப்மெட்’ என்று சொன்னால், மாநகரப் பேருந்துகளும் வெளியூர் பேருந்துகளும் அந்த நிறுத்தத்தில் நிற்கின்றன.  
அதென்ன, 'நிப்மெட்’? 'ஒன்றுக்கும் மேற்பட்ட ஊனமுற்றோரின் மேம்பாட்டுக்கான தேசிய நிறுவனம்’ (National Institute for Empowerment of Persons with Multiple Disabilities) என்பதன் சுருக்கமே 'நிப்மெட்’.
'சிறப்புக்குழந்தைகள்’ என்று அழைக்கப்படும் மாற்றுத்திறன் உடைய குழந்தைகளைப் பெற்றவர்களின் மனவலியை எளிதில் வார்த்தைகளில் அடக்கிவிட முடியாது. ஆனால் கண்களில் நம்பிக்கையைத் தேக்கி, இதயத்தில் உறுதியைத் தாங்கி, இங்கே வரும்  பெற்றோர்களின் நம்பிக்கை வீண்போவதே இல்லை. அவர்களின் பாரத்தைக் குறைத்து, குழந்தைகளுக்குப் பயிற்சி தந்து, மறுவாழ்வு அளிக்கிறது 'நிப்மெட்’.

சூரிய நமஸ்காரம்/ ஞாயிறு போற்றுதும்

சூரிய நமஸ்காரம் என்பது வடமொழி வார்த்தையாக இருக்கலாம். ஆனால் சூரியனை வணங்குவதும் போற்றுவதும் காலங்காலமாக நிலவி வந்த நம் தமிழ் மரபுதான். 'ஞாயிறு போற்றுதும்’ என்கிறது சிலப்பதிகாரம்.  பொங்கல் கொண்டாடுவதே சூரியனுக்கு நன்றி சொல்லத்தானே!
மேலும் படிக்க;

அன்னாசிப்பூ, பட்டை, பெருஞ்சீரகம்: பிரியமான பிரியாணி

வீடு முழுவதும் மணக்கும் பிரியாணியின் வாசனையைப் பிடித்துக் கொண்டே உள்ளே வந்தாள் ஷைலு.
'என்ன பாட்டி இது..! பிரியாணியில், நட்சத்திரம் நட்சத்திரமா என்னமோ அழகா இருக்குது..?''
'இதுக்குப் பெயர் அன்னாசிப்பூ... இன்னொரு பெயர் தக்கோலம்.'
'அன்னாசிப்பழத்துல இருக்கிற பூவா இது?'
'இல்லை... அருணாச்சலப் பிரதேசம் மாநிலத்துல விளையும் ஒருவித மணமூட்டி. அன்னாசிப்பூ வெறும் மசாலா மணத்துக்காக மட்டுமல்ல. உணவை அழகுபடுத்துறதுக்கும், மருந்தாவும் பயன்படுது. வைரஸ் கிருமியை அழிக்கக்கூடிய  மருந்தான 'ஷிகிமிக் அமிலம்’ (Shikimic acid) இதில் இருக்கு. சாதாரணக் காய்ச்சலில் தொடங்கி, பறவைக் காய்ச்சல் வரைக்கும் பல நோய்களைப் போக்கக்கூடிய தன்மை இந்த அன்னாசிப்பூவுக்கு இருக்கிறதா சமீபத்துல கண்டுபிடிச்சிருக்காங்க.'

http://www.vikatan.com/new/article.php?module=magazine&aid=97887

Friday, August 29, 2014

வெளிநாட்டில் வாழும் இந்தியர்களை வகைகள்

வெளிநாட்டில் வாழும் இந்தியர்களை மூன்று வகையாகப் பிரிக்கலாம்.
வெளிநாடுவாழ் இந்தியர்கள் - (NRI)
இந்திய வம்சாவழியினர் (PIO)
வெளிநாட்டைச் சேர்ந்தவர் (Foreign national)
இந்த மூன்று வகையினரைப் பற்றி சற்று விரிவாகப் பார்க்கலாம்.
 என்ஆர்ஐ!
இந்தியாவில் பிறந்து, இந்தியாவில் பாஸ்போர்ட் எடுத்து, வேலை நிமித்த மாகவோ, சொந்த வேலை காரண மாகவோ வெளிநாட்டில் வாழ்பவர்களை என்ஆர்ஐ என்கிறோம்.
பிஐஓ!
இந்தியாவில் பிறந்து, வெளிநாட்டில் 5 வருடங்களுக்குமேல் வாழ்ந்து, அந்த நாட்டின் வாழ்வுரிமை பெற்று இரண்டு நாட்டிலும் வாழும் உரிமை பெற்றவர் களை பிஐஓ என்கிறோம்.
 வெளிநாட்டைச் சேர்ந்தவர்!
வெளிநாட்டில் பிறந்து வெளிநாட்டு வாழ்வுரிமை பெற்று, வேலை நிமித்த மாகவோ அல்லது சொந்த வேலை காரணமாகவோ இந்தியாவில் வாழ்பவரை வெளிநாட்டைச் சேர்ந்தவர் என்கிறோம். 
இனி இவர்களுக்கு ஏற்ற இன்ஷூரன்ஸ் பாலிசி பற்றி பார்ப்போம்.

Thursday, August 28, 2014

சரியான பாத்திரம்

தினமும் சாப்பிடும் உணவு, சரிவிகிதத்தில் இருக்கிறதா, சத்தானதா என்று யோசிக்கும் நாம், அன்றாடம் சமையலுக்குப் பயன்படுத்தும் பாத்திரங்கள் சரியானவைதானா என்று யோசிப்பது இல்லை. அவசரகதியில் இதற்கெல்லாம் ஏது நேரம் என்று, சமைக்கவும் சாப்பிடவும் தொடங்குகிறோம். சமையலறையில் குக்கரில் தொடங்கி, கடாய், தவா, பால் பாத்திரம் எனச் நான் ஸ்டிக் பொருட்கள் நிறைந்துகிடக்கின்றன. மண் பானை, இரும்பு, ஈயச்செம்பு, பித்தளை சாமான்களை இனி அருங்காட்சியகத்தில்தான் பார்க்க முடியும் என்ற நிலை. 

http://senthilvayal.com/2014/08/27/%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9/


Tuesday, August 26, 2014

கலையா, அறிவியலா எது முக்கியம்?

கலையா, அறிவியலா எது முக்கியம்?
'ஸய்ன்ஸ் இல்லாவிட்டால் அசட்டுத்தனம் மலியும். இலக்கியம் இல்லாவிட்டால், நாம் உணர்ச்சியற்ற யந்திரங்களாகிவிடுவோம்’ என்று புதுமைப்பித்தன் 1934-ல் எழுதியிருக்கிறார்.
''ஒரு ஸி.வி.ராமன், ஒரு ஜகதீச சந்திர போசு, ஒரு மார்க்கனி, ஒரு எடிஸன், ஒரு கார்ல் மார்க்ஸ், ஒரு கீத் பிறக்காவிட்டால், நாகரிக வளர்ச்சிக்கு சாதனம் இருக்காது. ஒரு பாரதி, ஒரு கம்பன், ஒரு தாகூர், ஒரு வால்ட் விட்மன் பிறக்காவிட்டால், வாழ்க்கையில் ஒரு பிடிப்பு ஏற்படாது. வாழ்க்கை ரஸிக்காது. வெறும் வெட்ட வெளியாய், காரண காரியங்களில் பிணிக்கப்பட்ட ஒரு இதயமற்ற கட்டுக்கோப்பாக இருக்கும்.
கலை - உணர்ச்சி நூல், அறிவியல் - அறிவு நூல். இரண்டுக்கும் ஒரு வித்தியாசம். ஒருவன், அறிவைக் கொண்டு துருவித் துருவி பிரித்துப் பிரித்து உலகத்தைக் கவனிக்கிறான். இன்னொருவன், சிருஷ்டியின் உண்மைகளை அப்படியே முழுக் கனவாகப் பார்த்துக் கணிக்கிறான். இரண்டும் அவசியம்தான். இரண்டும் எதிர்க்கட்சி போடவில்லை. இரண்டும் ஒன்றை ஒன்று முற்றுப்படுத்துகிறது. தெய்வத்தை படைப்பது கவிஞன். தெய்வத்தை அறிபவன் ஸயன்டிஸ்ட்'' என்கிறார் புதுமைப்பித்தன்.
நன்றி: விகடன்

வணிகம்: PayU சலுகைகள்

https://payumoney.com/fantastic15.html?tab=all

தமிழ் பாடல் வரிகள்

http://tamilpaadalvari.wordpress.com/

Monday, August 18, 2014

வெந்நீர் மகிமை

வெறும் தண்ணீர் மட்டுமல்ல; வெந்நீரிலும் மருத்துவ குணம் நிறையவே இருக்கிறது. 

http://senthilvayal.com/2014/08/12/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F/

Sunday, August 17, 2014

மாடித் தோட்டம்: நீங்களே செய்து பாருங்கள்
http://www.nalam.net/tamilnadu-govt-project-terrace-gardening/


இயற்கைவழி வேளாண்மைச் சான்றிதழ்


இயற்கைவழி வேளாண்மைச் சான்றிதழ்' பெறும் வழி முறைகளைப் பற்றி 'குடும்பம்’ அமைப்பைச் சேர்ந்த சுரேஷ்கண்ணா  பேசியபோது, ''இயற்கை வேளாண்மை குறித்த விழிப்பு உணர்வு மக்களிடையே அதிகரித்து வருகிறது. ஆனால், இதற்கான சான்றிதழைப் பெற விவசாயிகள் அதிக செலவு செய்கிறார்கள். இப்படி சான்றிதழ் அளிக்கும் வேலையை பல நிறுவனங்கள் தொழிலாகச் செய்து வருகின்றன. நுகர்வோர்க்கும் உழுவோர்க்கும் சம்பந்தமேயில்லாத மூன்றாம் நபர், நம் நிலத்தை ஆய்வு செய்து சான்றிதழ் வழங்கும் முறைதான் நடைமுறையில் உள்ளது. ஆனால், செலவே இல்லாமல் 'பங்கேற்பு முறை உறுதியளிப்புச் சான்றிதழ்’ மூலம் குழுவில் உள்ள உள்ளூர் மக்களே இயற்கை வேளாண் சான்றிதழ் கொடுக்கும் எளிய முறையும் உண்டு.
விவசாயிகள், நுகர்வோர், மாணவர்கள் உள்ளிட்ட பொதுமக்களை உள்ளடக்கிய அங்கீகரிக்கப்பட்ட உள்ளூர் குழுக்கள் மூலம் இயற்கை வேளாண்மைச் சான்றிதழ்களைப் பெற்றுக்கொள்ள முடியும். ஐ.நா சபையின் கீழ் செயல்படும் 'ஐ ஃபார்ம்’ என்கிற 'இன்டர்நேஷனல் பெடரேஷன் ஃபார் ஆர்கானிக் அக்ரிகல்சுரல் மூவ்மெண்ட்’ என்ற அமைப்புக்கு உலகளவிலான இணைப்பு உண்டு. இந்த அமைப்பின் வழிகாட்டுதல் நெறிமுறைகளின்படி குழுக்கள் அமைத்துக் கொண்டு பெயர் சூட்டிக்கொண்டு... தேசிய அளவில் உள்ள ஆர்கானிக் கவுன்சிலில் பதிவு செய்துகொள்ள வேண்டும். 5 முதல், அதிக பட்சம் 20 உறுப்பினர்கள் வரை ஒரு குழுவில் இருக்கலாம். இக்குழுவினரே இக்குழுவில் உள்ள மற்ற விவசாயிகளுக்கு சான்றிதழ் வழங்க முடியும். சான்றிதழ் தேவைப்படும் விவசாயிகளின் நிலத்தை இக்குழுவில் உள்ள இரண்டு நபர்கள் நேரில் சென்று மதிப்பீடு செய்து, சான்றிதழ் வழங்கலாம். இச்சான்றிதழை மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பிக்க வேண்டும்.

தியேட்டர்களிலும் குறும்படம்


'பீட்சா’ புகழ் கார்த்திக் சுப்புராஜ் இப்போது 'ஸ்டோன் பெஞ்ச்’ என்ற நிறுவனத்தை ஆரம்பித்திருக்கிறார். இது தயாரிப்பு நிறுவனமா? 'ஜிகிர்தண்டா’ பிஸியில் இருந்தவரிடம் பேசினேன்.
http://www.vikatan.com/new/article.php?module=magazine&aid=97424


Wednesday, August 13, 2014

வேளாண்மை நிறுவனம்:

நல்ல கீரை:

http://www.thehindu.com/news/cities/chennai/chen-society/going-green-for-a-living/article5819955.ece

http://adupankarai.kamalascorner.com/2007/10/blog-post_02.html

இவர் 2014-ம் ஆண்டில் ‘விவசாயம்’என்ற குறுஞ்செயலியை உருவாக்கினார். விவசாயம் சார்ந்த நவீனத் தொழில்நுட்பங்களை எப்படிப் பயன்படுத்துவது என்பதை எளிமையாக விளக்குகிறது இந்தச் செயலி.

http://tamil.thehindu.com/society/lifestyle/செயலாலும்-செயலியாலும்-விவசாயிகளுக்கு-உதவும்-இளைஞர்/article9693272.ece


சில யுகங்களில் சில மனிதர்கள்

http://bepositive.org.in/man-of-the-millennium-kalyana-sundaram/


Friday, August 8, 2014

புற்று நோய்க்கான சிகிச்சை

http://thangavelmanickadevar.blogspot.ie/2014/08/blog-post.html

http://www.chakru.com/narsipura-subbaiah-narayana-murthy-free-cancer-treatment/

Sunday, August 3, 2014

அருகம்புலின் சிறப்பு

அருகம்புல் சாறு
அருகம்புல்லைப் பறித்தவுடன் சுத்தப்படுத்தி உரலில் இடித்தோ, அம்மியில் அரைத்தோ சாறு எடுக்கலாம். மசிவது கஷ்டம் என்பதால், வெந்நீரில் சிறிது நேரம் ஊறவைத்து பிறகு அரைக்கலாம்.  தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வர, எந்த நோயும் நெருங்காது. உடல் பருமன் உள்ளவர்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை விரைவில் குறையும்.  இரவில் நல்ல தூக்கம் வரும். கர்ப்பப்பை கோளாறுகள் நீங்கும்.
அருகம்புல் சாறுடன், சிறிது மிளகுத்தூள் சேர்த்து அருந்தினால், நன்றாகப் பசியைத் தூண்டும்.

http://senthilvayal.com/2014/08/01/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D/

Friday, August 1, 2014

KFC உணவுவின் அபத்து;

இத்தகைய உணவுகளால் என்ன ஏற்படுகிறது?
உடல் எடை அதிகரிப்பு,சர்க்கரை நோய்,மார்பகப்புற்று நோய்,இதய நோய்கள்,இரத்த அழுத்தம்.கடந்த 30 வருடங்களில் எடை அதிகமான குழந்தைகள் 30% அதிகரித்துள்ளனர்.
மேலும் 60% அமெரிக்கர்கள்,13% குழந்தை,இளைஞர்கள் எடை அதிகம் ஆகியுள்ளனர்.
கடந்த வருடம் 115 பில்லியன் டாலர்கள் துரித உணவுக்காக அமெரிக்கர்கள் செலவிட்டுள்ளனர். இது அவர்கள் கார் வாங்க,கம்புயூட்டர் வாங்க,உயர்படிப்புக்கு செலவு செய்த தொகையைவிட அதிகம்!!

மேலும் படிக்க:   http://vkalathurone.blogspot.ie/2014/04/kfc.html

ஆலயம் செல்வதால் அறிவியல் ரீதியாக மனிதனுக்கு ஏற்படும் நன்மைகள்

கோயில் என்பது தெய்வத்தின் இருப்பிடம் மட்டுமில்லை. கோயில் என்பது விஞ்ஞானபூர்வமாக மனிதனுக்கு உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பல நன்மைகள் செய்வதற்காக அமைக்கப்பட்ட ஒரு கிளினிக் என்றே சொல்லலாம். சாஸ்திரப்படி அமைக்கப்படும் கோயில்கள், பூமியின் காந்த அலைகள் அடர்த்தியாகப் பாயும் இடத்தில் அமைகின்றன. ஊர்க்கோடியிலோ, ஊர் நடுவிலோ, மலையுச்சியிலோ எங்காயினும் கோயிலுக்கென்று இடம் அந்தக் காலத்தில் அமைக்கப்பட்டது இந்த அடிப்படையில்தான்!

இந்த உயர்காந்த அலைகள் (ஹை மேக்னடிக் வேவ்ஸ்) அடர்ந்திருக்கும் இடத்தின் மையப்பகுதியில் கர்ப்பக்கிருகம் (மூலஸ்தானம்) அமைக்கப்படுகிறது. அதனால்தான் கர்ப்பக்கிருகத்தில் மூல விக்கிரகத்தின் அடியில், யந்திரங்கள் பதித்தார்கள். சில உயரிய மந்திரங்கள் பொறிக்கப்பட்ட செப்புத்தகடுகளே யந்திரங்கள்! பூமியின் காந்த அலைகளை செப்புத்தகடுகள் உள்வாங்கி சுற்றுப்புறத்துக்கு அதைப் பாய்ச்சுகிறது. இந்த விஞ்ஞான அடிப்படையில்தான் மின்சாரத்தைக் கொண்டுசெல்ல செப்புக்கம்பிகளை உபயோகப்படுத்துகின்றனர். கர்ப்பக்கிருகத்தைப் பிரதட்சணமாக (க்ளாக்வைஸ்) சுற்றும் பக்தர்களின் உடலில், தானாகவே இந்த காந்த சக்தி மென்மையாகப் பாய்கிறது. அடிக்கடி கோயிலுக்கு வந்து பிரதட்சணம் செய்யச் செய்ய இந்த காந்த சக்தி உடலில் கணிசமாக ஏறுகிறது.

இதனால் உடலில் பாஸிடிவ் எனர்ஜி உண்டாகிறது. இந்தச் சக்தி பூரணமாக பக்தர்களைச் சென்றடைவதற்காகவே, மூலஸ்தானம் மூன்று பக்கமும் பெரிய ஜன்னல்கள் இல்லாமல் அடைக்கப்படுகிறது. இதனால் கர்ப்பக்கிருகத்துக்கு வெளியில் நின்று தரிசிக்கும் பக்தர்களின் மேல் யந்திரத்தின் காந்த சக்தி முழுதாகப் பாய முடிகிறது. மூலஸ்தானத்தில் ஏற்றப்படும் விளக்குகள், உஷ்ண சக்தியையும் வெளிச்ச சக்தியையும் பாய்ச்சுகிறது. கோயிலில் ஒலிக்கும் மணிச் சத்தமும் பூஜை மந்திரச் சப்தங்களும் சவுண்ட் எனர்ஜி-யைத் தருகின்றன. பூஜை முடிந்ததும் பக்தர்களுக்கு வழங்கப்படும் தீர்த்தத்தில் ஏலக்காய், துளசி, கிராம்பு போன்றவை கலக்கப்படுகின்றன. இந்தப் பண்டங்கள் எல்லாமே மனித ஆரோக்கியத்துக்கு உதவுவதால், தீர்த்தம் புனிதமானதாக மட்டுமில்லாமல் உடல் வளத்துக்கு உபயோகமானதாகவும் ஆகிறது. பெருமாள் கோயிலில் மஞ்சளும், குருவாயூரப்பன் கோயிலில் சந்தனமும், சிவன் கோயிலில் திருநீறும், பொதுவாகக் குங்குமமும் பிரசாதமாகக் கொடுக்கப்படுகின்றன. இவை எல்லாமே மருத்துவ குணமுடைய வஸ்துக்களை உள்ளடக்கியது.

பெருமாள் கோயிலில் தீர்த்தத்தில் கலக்கப்படும் பச்சைக் கற்பூரம், வாசனையாகவும் வித்தியாசமான சுவையுடையதாகவும் இருக்கும். உடலில் ரத்தக்காயம் ஏற்பட்டால், நாம் உடனே காயம் செப்டிக் ஆகாமல் இருக்க தடவுகிறோமே பென்சாயின் ! அது வேறொன்றுமில்லை, பச்சைக் கற்பூரக் கலவையில் உருவாவதுதான். கர்ப்பக்கிருகத்தில் நம்மேல் பாயக்கூடிய பாஸிடிவ் காந்த அலைகளைப் பெற்றுக் கொள்வதற்காகத்தான் பல கோயில்களில் ஆண்கள் சட்டை அணியாமல் வர வேண்டும் என்று சொல்கிறார்கள். பொதுவாகப் பெண்கள் அணியும் தங்க நகைகளில் கலந்திருக்கும் செம்பின் மூலம் அவர்களுக்கும் இதே எனர்ஜி பாய்கிறது.

கோயில் பிராகாரத்தை 11 முறை, 108 முறை என்று பிரதட்சணம் செய்யும்போது, நமது உடலின் கொழுப்பு தானாக எரிந்து ஆரோக்கியம் கூடுகிறது. அந்தக் காலத்தில் கோயிலுக்குச் சென்று பிரதட்சணம் செய்ததாலேயே சர்க்கரை வியாதி, ரத்த அழுத்தம் போன்ற வியாதிகள் தவிர்க்கப்பட்டன. இதோடு வேத கோஷமும், பிரார்த்தனை சுலோகங்களும் சொல்லும்போது, உடலுடன் சேர்ந்து உள்ளமும் புத்துணர்ச்சி பெறுகிறது.


நன்றி; http://temple.dinamalar.com/news_detail.php?id=10235